இலங்கையில் ‘தொடரும் தமிழ் இனப்படுகொலை’ என்ற பெயரில் சிறு ஆவண புத்தகக் கையேடு ஒன்று மே பதினேழு இயக்கத்தினால் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் பக்க அரங்கிற்குள் வெளியிடப்பட்டது

- in ஈழ விடுதலை

இலங்கையில் ‘தொடரும் தமிழ் இனப்படுகொலை’ என்ற பெயரில் சிறு ஆவண புத்தகக் கையேடு ஒன்று மே பதினேழு இயக்கத்தினால் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் பக்க அரங்கிற்குள் வெளியிடப்பட்டது. மே பதினேழு இயக்கம் சார்பாக தோழர் விவேகானந்தன் முன்னின்று வெளியிட்டார்.

2017 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை மையப்படுத்தி இக்கையேடு தயாரிக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான மக்களின் போராட்டங்கள், ராணுவமயமாக்கல், நில ஆக்கிரமிப்பு, சிங்களமயமாக்கல், பெளத்த விகாரைகள் திணிப்பு, அரசியல் கைதிகள், மாணவர்கள் மீதான தாக்குதல், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், சித்ரவதைகள் என பல தலைப்புகளை மையப்படுத்தி இக்கையேடு தயாரிக்கப்பட்டது.

இக்கையேடு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திற்குள்ளாக பார்வைக்கு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. தோழர் பண்ருட்டி.வேல்முருகன் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கும், அமைப்புகளுக்கும் இக்கையேடு வழங்கப்பட்டது.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply