புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், 5ம் வகுப்பு மட்டும் 8ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் தமிழக அரசின் உத்தரவை திரும்பப் பெறக்கோரி, கோவை தெற்கு தாசில்தார் அலுவல்கள் முன்பு, 18/09/2019 புதன்கிழமை மாலை 4 மணிக்கு, அனைத்து ஜனநாயக இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கல்வி உரிமையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டிய கோரிக்கையோடும், தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் 5ம், 8ம் வகுப்பு பொதுத் தேர்வை திரும்பப் பெறக் கோரியும் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர். இதில், ஜனநாயக இயக்கங்களோடு மே பதினேழு இயக்கமும் பங்கெடுத்தது.









