மனித உரிமை மீறல்களுக்கு வித்திடும் NIA எனும் தேசிய புலனாய்வு முகமைக்கு வரம்பு மீறிய அதிகாரங்களை வழங்கியுள்ள பாஜக அரசைக் கண்டித்தும், UAPA கருப்புச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் ஜூலை 27 சனி மாலை 5 மணிக்கு சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேரந்த தலைவர்களும், தோழர்களும் பங்கேற்றனர்.
மே பதினேழு இயக்கமும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது. மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உரையாற்றினார்.