SDPI கட்சியின் முப்பெரும் விழாவில், மதவெறி, பாசிச சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு “பழனிபாபா விருது” வழங்கப்பட்டது. SDPI கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் இந்த விருதை வழங்கினார்.
தமிழ்நாட்டின் அனைத்து பிரச்சினைக்கும் போராட்டக் களத்தில் நிற்கும் SDPI கட்சியுடன் இணைந்து நிற்பதில் பெருமை கொள்வதாக திருமுருகன் காந்தி பேசினார்.
முகிலன் எங்கே என்ற கேள்வியை நாம் அனைவரும் இணைந்து எழுப்ப வேண்டும் என்றும் பேசினார்.