நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடு: லத்தீன் அமெரிக்கா
[ இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு ]
————————–
லத்தீன் அமெரிக்க வரலாற்றிலிருந்து தமிழர்கள் கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது.
கியூபா, பொலிவியா, வெனிசுவேலா, பிரேசில், அர்ஜென்டினா என லத்தீன் அமெரிக்க நாடுகளின் ரத்தத்தை உறிஞ்சிய வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் வரலாற்றின் கோரமான பக்கங்களில் முக்கியமானவை.
அதனை எதிர்த்து நின்ற லத்தீன் அமெரிக்க உழைக்கும் மக்களின் போராட்டங்கள் வரலாற்றின் முக்கிய பேரெழுச்சியாகும். திரிக்கப்பட்ட பொய் வரலாறுகளை அம்பலமாக்கி, உண்மையை எடுத்துரைக்கிறது இந்நூல்.
தமிழர்கள் பல்வேறு சுரண்டல்களை எதிர்கொண்டிருக்கும் இந்த சூழலில் இந்த நூல் நம் அனைவரின் வீடுகளிலும் இருக்க வேண்டிய முக்கியமான பொக்கிஷமாகும்.
பக்கம் 396, விலை Rs400,
முன் வெளியீட்டு திட்டம் விலை Rs300
நூலாசிரியர்: ஜான் சார்லஸ் சஸ்டீன்
மொழிப்பெயர்ப்பாளர்: ந.மாலதி