மோடி ஆட்சியும் வங்கி மோசடியும்

மோடி ஆட்சியும் வங்கி மோசடியும்

இந்திய ஒன்றியத்தில் வங்கிகள் உருவாக்கப்பட்ட பின் வரலாற்றில் இதுவரை இல்லாதளவுக்கு மிகப்பெரிய வங்கி மோசடி தற்போது விடியோகான் நிறுவனம் ரூபாய் 90,000கோடி அளவுக்கு செய்திருக்கிற மோசடி தான்.

https://economictimes.indiatimes.com/industry/banking/finance/banking/banks-others-may-lose-over-rs-90000-crore-as-videocon/articleshow/68722634.cms?from=mdr

இந்த வங்கி மோசடியில் பெருமளவிலான பணம் இழந்திருப்பது அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தான்.

இந்த 90,000கோடி என்பது இந்தியா முழுமைக்கும் இருக்கிற தொடக்கக் கல்வி மற்றும் உயர்கல்விக்கு இந்திய ஒன்றிய அரசு ஒதுக்கிற பணத்தின் மூன்று ஆண்டின் கூட்டுத்தொகை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இது ஏதோ இந்த ஒரு நிறுவனம் மட்டுமில்லை விஜய் மல்லைய்யா (9000கோடி ), நிரவ் மோடி(13,000கோடி), கனிஷ்க் நகை நிறுவனம் (824கோடி), நாதெல்லா சம்பத் நகைகடை(173கோடி) என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. 2014லில் மோடி அரசு பதவிக்கு வந்த பின் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகி தற்போது வங்கிகளின் பெரிய முதலாளிகள் வாங்கிய கடனளவு 56லட்சம் கோடி இதில் வரவே வராதென்று வங்கிகள் முடிவு செய்த வாரா கடன் மட்டும் 12லட்சம் கோடியை தாண்டி நிற்கிறது. பார்க்க படம் 01. இதனால் கிட்டதட்ட பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் மூடும் நிலைக்கு வந்துவிட்டது.

இந்த நிலையிலிருந்து பொதுத்துறை வங்கிகளை காப்பாற்ற வங்கி மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தண்டனை கொடுப்பதோடு அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து நிலைமையை சரிசெய்யவேண்டிய மோடி அரசு. அதை செய்யாமல் குற்றவாளிகளை தப்பவிட்டுவிட்டு அவர்களின் சொத்துகளின் மீது எந்த நடவடிக்கையை எடுக்காமல் நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளை இணைப்பதும், மினிமம் பேலன்ஸ் வைக்கவில்லையென்றால் அபராதம், மாதத்திற்கு நாண்கு முறைக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் அபராதமென்று சாதாரண மக்களிடமிருந்து பணத்தை பிடுங்குகிறது.

இப்படிப்பட்ட மோடி அரசு தான் சொல்லுகிறது நாங்கள் தேசத்துக்கு காவலாளிகளென்று இவர்கள் தேசத்திற்கு காவலாளிகள் இல்லை கார்ப்ரேட் முதலாளிகளுக்கு தான் காவலாளிகள்.

Leave a Reply