இந்தியாவின் வணிகத்தை உலக பொதுவர்த்தக கழகத்திடம் (WTO) அடகு வைத்த பிஜேபியின் மோடி அரசு
உலகளவில் சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா பிரேசிலுக்கு அடுத்து இராண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையை அடைய இந்திய ஒன்றிய அரசு சர்க்கரை ஆலைகளுக்கு மூலப்பொருட்கள் வாங்குவதற்கு மானியம் மற்றும் ஏற்றுமதிக்கு வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை கொடுக்கிறது.(ஆனால் ஆலை முதலாளிகள் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உரிய பணத்தை கொடுப்பதில்லை அது வேறு.) அரசின் இந்த நடவடிக்கையால் இதுவரை இல்லாதளவுக்கு 2017-2018 ஆண்டில் இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி மிக அதிகளவு இருக்கிறது. பார்க்க படம்01.
இதனால் மற்ற நாடுகளை காட்டிலும் மிகக்குறைந்த விலைக்கு சர்க்கரையை ஏற்றுமதி செய்ய இந்தியாவால் முடிந்தது. உதாரணத்திற்கு புதிதாக சீனாவுக்கும் இலங்கைக்கும் இந்தியா ஜனவரி’19 மாதத்திலிருந்து சர்க்கரையை ஏற்றுமதி செய்கிறது.
இப்படி சர்க்கரை ஏற்றுமதியில் முதலிடத்தை நோக்கி இந்தியா போய்க்கொண்டிருந்த நேரத்தில் ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் பிரேசில் ஆகிய இரண்டு நாடுகளும் கடந்த மாதம் மார்ச் 01’19 அன்று உலக பொதுவர்த்தக கழகத்தில் இந்தியா உள்நாட்டில் சர்க்கரை உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் அதிகளவில் மானியம் வழங்குகிறது. இதனால் சந்தையில் எங்கள் நாட்டு சர்க்கரையை விட அவர்களால் விலை குறைவாக விற்கமுடிகிறது. இதனால் எங்கள் வணிகம் பாதிக்கப்படுகிறது. எனவே இந்திய அரசு சர்க்கரைக்கு வழங்கும் மானியங்களை குறைக்கவேண்டுமென்றும் ஒரு புகாரை தெரிவித்தது. https://
இந்த புகாரின் அடிப்படையில் உலக பொதுவர்த்தகத்தில் பேசிய மோடி அரசின் பிரதிநிதி இந்திய விவசாயிகளுக்கும் இந்திய நாட்டின் சர்க்கரை வணிகர்களுக்கு ஆதரவாக பேசாமல் வெளிநாட்டு கம்பெனிகளின் வணிகம் பாதிப்படையாமல் என்ன செய்யமுடியுமோ அதை கூடிய விரைவில் இந்தியா செய்யுமென்று உறுதி கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். இதனால் வரும் காலங்களில் சர்க்கரைக்கான மானியங்கள் வெகுவாக குறைய வாய்ப்பிருக்கிறது. சர்க்கரை உற்பத்தியை நம்பியிருக்கிற கோடிக்கணக்கான இந்திய விவசாயிகளையும் வணிகர்களையும் அதளபாதாளத்தில் தள்ளும் முடிவை வெளிநாட்டு பெருநிறுவனங்களுக்கு செய்ய முனைந்திருக்கிறது இந்திய அரசு.
ஏற்கனவே ரேசன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் அழுத்தத்திற்காக பிஜேபி மோடி அரசின் அப்போதைய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்திட்டு இருந்தார்.அதனை அப்போதே மே 17இயக்கம் அம்பலப்படுத்தியிருந்தது. இப்போது இந்தியாவின் இராண்டாவது மிகப்பெரிய வேலைவாய்ப்பினை உருவாக்கக்கூடிய சர்கக்ரை உற்பத்தியை முற்றிலும் முடங்க பிஜேபி அரசு முயற்சி செய்கிறது.இதனை ஆரம்பத்திலேயே எதிர்க்கவேண்டும். இல்லையென்றால் வெளிநாட்டு நிறுவனங்களுக்காக உள்நாட்டு வணிகம் சிதைக்கப்படும். அதுமட்டுமல்லாது இது அடுத்தடுத்து அனைத்து வணிகத்திற்கும் நடக்கும் ஆபத்தும் இருக்கிறது.
மே 17 இயக்கம்
9884072010