————————–
இதனை சீர்குலைக்கும் விதமாக தமிழக அரசும், காவல் துறையும் திட்டமிட்டு பாதிக்கப்பட்ட பெண்களின் முகத்தையும் அவர்களின் தனிப்பட்ட விவரங்களையும் பொதுவெளியில் வெளியிட்டு வருகிறது. நீதிமன்றம் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண்களின் எந்த ஒரு தனிப்பட்ட விபரங்களையும் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என்று தீர்ப்புக் கொடுத்த பின்னும், தமிழக காவல் துறை திட்டமிட்டு அவர்களின் தனிப்பட்ட விவரங்களை பொது வெளியில் வெளிவிடுவது என்பது உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்க முடியும்.(ஆதாரம் இணைப்பில்)
ஏனென்றால் இப்படி பொதுவெளியில் வெளியீட்டு குறிப்பிட்ட பெண்ணை அடையாளப்படுத்திவிட்டால் அவர்களை இந்த சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திவிடமுடியும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய அரசும், காவல்துறையும் இப்படி குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது. ஆகவே அரசு இது போன்ற செயலை கைவிட்டுவிட்டு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்ட வேண்டும்.
மே 17 இயக்கம்
9884072010