மார்ச் 9 அன்று ஏழு தமிழர் விடுதலை கோரி தமிழகம் முழுதும் நடைபெறும் மனித சங்கிலியில் அணி திரள்வோம்! – மே பதினேழு இயக்கம்

மார்ச் 9 அன்று ஏழு தமிழர் விடுதலை கோரி தமிழகம் முழுதும் நடைபெறும் மனித சங்கிலியில் அணி திரள்வோம்! – மே பதினேழு இயக்கம்

ராஜீவ் கொலையின் பெயரால் ஏழு நிரபராதித் தமிழர்கள் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ வாதங்கள், எத்தனையோ போராட்டங்கள் எல்லாம் நடந்து தற்போது உச்சநீதிமன்றமும் இவர்களின் விடுதலைக்கு வழிவிட்டுவிட்டது. ஏழ்வரை விடுவிப்பதில் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்பதையும் சொல்லிவிட்டது. தமிழக அரசும் தனது அமைச்சரவையைக் கூட்டி விடுதலைக்கான தீர்மானத்தினை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவிட்டது.

பாஜகவின் பிரதிநிதியைப் போல செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதுவரையில் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வருகிறார். ஒரு அமைச்சரவையின் முடிவை மீறி தடுத்து வைப்பதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லாத போதிலும் சட்ட விரோதமாக தடுத்து வைத்திருக்கிறார்.

இந்த நேரத்தில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களை விடுவிக்க தமிழ்நாட்டு மக்கள் அவர்களின் பின்னால் இருக்கிறோம் என்பதை மத்திய அரசுக்கும், ஆளுநருக்கும் நாம் காண்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அற்புதம் அம்மாள் அவர்கள் ஒருங்கிணைக்கிற இந்த நீதிக்கான மனித சங்கிலியில் தமிழர்கள் அனைவரும் பெருந்திரளாய் திரள்வோம்.

நண்பர்கள், குடும்பத்தினர் எல்லோரையும் அழைத்து வாருங்கள்! நம் ஏழு நிரபராதிகளின் விடுதலையைக் கோரி கைகோர்த்து நிற்போம்!

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply