குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்
இன்று பாராளுமன்றத்தில் ”குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019” வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. ஒருவேளை இந்த வாக்கெடுப்பில் இந்த மசோதா வென்றுவிட்டால் சட்டமாக இயற்றப்பட்டுவிடும். இச்சட்டத்தின் மூலம் அசாம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேசம் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து குடியேறிய மூஸ்லீம்களுக்கு மட்டும் குடியுரிமை பறிக்கப்படும், அதேநேரத்தில் மேற்கண்ட நாடுகளிலிருந்து வந்த முஸ்லீம் அல்லாதவர்கள் (இந்துக்களுக்கு)2014க்கு முன் வந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும்.
இப்படிப்பட்ட மசோதாவை ஏன் கொண்டு வருகிறோமென்று சொல்லும்போது வடகிழக்கு மாகாணங்களில் இருக்கிற பூர்வகுடி மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டு எடுக்கவே இந்த திருத்த மசோதா என்று பிஜேபி வாதாடாகிறது. ஆனால்
வடகிழக்கு மாகாணங்களில் இருக்கும் அறிவுசீவிகள் மற்றும் பூர்வகுடி மக்களோ இந்த புதிய மசோதாவினால் வடகிழக்கு மாகாணங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை மேலும் கூடுதல் பாதிப்பு தான் இருக்குமென்று இந்த சட்டதிருத்த மசோதாவை எதிர்க்கின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணமென்பது.
அசாம், மணீப்பூர் திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் அகதிகளாலும், உள்நாட்டில் குறிப்பாக மேற்கு வங்காளத்திலிருந்து தொழில் நிமித்தமாக வருபவர்ளாலும் எங்களின் அடிப்படை உரிமைகள், வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகிறது. இதனை மீட்கவே பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம்.இதை சாக்காக வைத்துக் கொண்டு இந்துவெறி பாஜக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் முஸ்லீம்களை மட்டும் விரட்டி விட்டுவிட்டு அந்த இடத்தில் இந்து உயர்சாதியினரை திட்டமிட்டு புகுத்த நினைக்கிறது. இதன்மூலம் வடமாநிலங்களில் பிஜேபி தனது செல்வாக்கை செலுத்தி இங்கிருக்கிற இயற்கை வளங்களை கார்ப்ரேட்களுக்கு தாரைவார்க்க திட்டமிடுகிறது.
அதோடு வடமாநிலங்களில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை காட்டிலும் உள்நாட்டிலிருந்து வேலைக்காக வருபவர்களால் தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களையும் முறைப்படுத்தவேண்டுமென்று தான் அசாம் மீசோரம் மணிப்பூர் திரிபுரா போன்ற மாநில மக்கள் போராடுகிறார்கள். ஆனால் மத்திய அரசு திட்டமிட்டு இதனை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு தனது இஸ்லாமிய வெறுப்புக்காகவும், வடகிழக்கு மாநில வளங்களை கொள்ளையடிக்கவுமே இந்த மசோதாவை கொண்டுவருகிறது.
மத்திய அரசின் இந்த நயவஞ்சகத்தை எதிர்த்து 03.02.2019 அன்று பத்மஸ்ரீ விருது பெற்றவரும் 6 முறை தேசிய விருதை பெற்ற மனிப்பூரி திரைத்துறை இயக்குனரும் படைப்பாளியுமான அரிபம் சியாம் சர்மா, 83 வயது, தனது பத்மஸ்ரீ விருதை இந்திய அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். ஆக மத்திய பிஜேபி அரசின் இந்த மசோதா வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு நன்மையையும் தராது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. ஆனாலும் தனது பார்ப்பன இந்துவெறிக்காகவும் பனியாக்களுக்கு இயற்கைவளங்களை தாரை வார்க்கவுமே இந்த மசோதவை நயவஞ்சமாக இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறது.
ஆகவே பிஜேபியின் இந்த நயவஞ்சகத்தை புரிந்துகொண்டு, இந்த மசோதாவை பிஜேபி தவிர்த்து அனைத்து எதிர் கட்சிகளும் எதிர்த்து வாக்களித்து முறியடிக்க வேண்டும்.ஆனால் அப்படி செய்வார்களா என்பது கேள்வி குறி தான்?