திருச்சியில் தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு, டிசம்பர் 23 அன்று கருஞ்சட்டைப் பேரணியும் அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு தமிழின உரிமை மீட்பு மாநாடும் நடைபெற்றது.
அனைத்து பெரியாரிய இயக்கங்களின் தலைவர்களும், படைப்பாளிகளும், செயல்பாட்டாளர்களும், தமிழறிஞர்களும், ஆய்வாளர்களும் பங்கேற்று மாநாட்டில் உரையாற்றினர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று பெரியாரியத்தின் முக்கியத்துவம் குறித்தும், காவி பாசிசத்தை வீழ்த்த வேண்டியதன் அவசியம் குறித்தும், தமிழினத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை மீட்க வேண்டியதன் அவசியம் குறித்தும் உரையாற்றினர்.
மாநாட்டு மேடையில் மூன்று இணையர்களுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது.
மாநாட்டில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் வரவேற்புரையாற்றினார். மாநாட்டிற்கு தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமையேற்றார். மாநாட்டின் நோக்கம் குறித்தான நோக்கவுரையை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசினார்.
தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் தொடக்க உரையாற்றினார்.
தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன் மாநாட்டின் தீர்மானங்களை முன்மொழிந்தார்.
திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் வே.ஆனைமுத்து, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமான், தியாகி இம்மானுவேல் பேரவையின் தலைவர் பூ.சந்திரபோசு, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம்.செரீப், ஆய்வறிஞர் பேரா. க.நெடுஞ்செழியன், சொல்லாய்வு அறிஞர் அருளியார், பண்பாட்டு ஆய்வாளர் பேரா. தொ.பரமசிவன், பொருளியல் அறிஞர் பேரா.ஜெயரஞ்சன், தாளாண்மை உழவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோ.திருநாவுக்கரசு, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, மக்கள் விடுதலைக் கட்சியின் தலைவர் முருகவேல்ராசன், புதிய குரல் அமைப்பின் தோழர் ஓவியா, தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், சமூக செயல்பாட்டாளர் பேராசிரியர் சரஸ்வதி, கரும்பனை கலை இலக்கிய ஊடக தளத்தின் தோழர் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, மக்கள் அரசு கட்சியின் தலைவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், வழக்கறிஞர் பாலமுருகன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தோழர் நிலவழகன், காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் மகேசு, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், திரைப்பட இயக்குநர் கோபி நயினார், சின்னத்திரை தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் தோழர் கவிதா பாரதி, டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தீபக், தமிழ்த்தேச நடுவத்தின் தோழர் கண.குறிஞ்சி, தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.சு.நாகராஜன், நீரோடை அமைப்பின் தோழர் நிலவன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், தற்சார்பு விவசாயிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கி.வே.பொன்னையன், இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கத்தின் தோழர் பாவெல், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் செள.சுந்தரமூர்த்தி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் தோழர் பார்த்திபன், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் தோழர் வினோத், கீற்று இணைய ஊடக ஆசிரியர் நந்தன், தமிழ்தமிழர் இயக்கத்தின் தோழர் பரிதி, தமிழர் உரிமை இயக்கத்தின் தோழர் சுப்பு மகேசு, ஐந்திணை கலை பண்பாட்டு இயக்கத்தின் தோழர் காஞ்சி அமுதன், எழுத்தாளர் தோழர் பாமரன் ஆகியோர் மாநாட்டில் சிறப்புரையாளர்களாக பங்கேற்றனர்.