மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்தித்து இருக்கிற தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்னும் நிவாரணப்பணிகள் தொடங்காமல் இருப்பதும் அதற்கு தேவையான உதவியை மத்திய அரசு வழங்காமல் கள்ள மௌனம் சாதிப்பதும் இந்திய அரசு தமிழர்களை புறக்கணிப்பு செய்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
இத்துணைக்கும் இந்திய ஒன்றியத்தில் அதிக வரியை செலுத்தும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழகத்தை இப்படி புறக்கணிப்பது இந்த சந்தேகத்தை மேலும் உறுதி செய்வதாகவே இருக்கிறது.
ஆகவே இந்த எண்ணத்திற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் வராமலிருக்க உடனடியாக மத்திய அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவித்து நிவாரணப் பணிகளை துரிதப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஏதோ மேலோட்டமாக பார்வையிடும் வேலையை விட்டுவிட்டு ஒவ்வொரு பகுதியாக மத்திய குழு ஆய்வு நடத்தி உண்மையான அறிக்கையை உடனடியாக வழங்கி அனைத்து மக்களுக்கும் நிவாரணம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.