* மோடி அரசு செய்யும் ஜனநாயக படுகொலை*
இந்திய இராணுவத்திற்கு இரபேல் விமானம் வாங்குவதில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்துகொண்டதால் நாட்டிற்கு 60,000கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறதென்றும் இதில் பிஜேபி மோடி அரசு ஊழல் செய்திருக்கிறதென்றும் பிரச்சனை பூதாகரமாக வெடித்திருக்கிற சூழ்நிலையில். இந்த ஊழலை விசாரிக்கவேண்டுமென்று பிஜேபியின் முன்னாள் அமைச்சர்களான ஜஸ்வந்த சின்கா, அருண்சோரி போன்றோர்கள் நீதிமன்றத்திலும், தனி அமைப்பான சிபிஜயையும் நாடினார்கள்.
இவர்களின் குற்றச்சாட்டு குறித்து சிபிஜயின் இயக்குனர் அலோக் வர்மா விசாரணையை தொடங்கியவுள்ளார். இதை தெரிந்துகொண்ட மத்திய மோடி அரசு இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் அஜித்தோவல் மூலமாக விசாரணையை தொடங்க வேண்டாமென்று சிபிஜ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு நெருக்குதல் கொடுத்திருக்கிறது. ஆனால் அவர் இதை புற்ந்தள்ளிவிட்டு விசாரணையை தொடங்கியுள்ளார். அதன்படி இந்திய ஒன்றியத்தில் இராணுவ செயலாளர் சஞ்சய் மித்ராவுக்கு கடிதம் எழுதி விளக்கம் கேட்டுள்ளார்.இதை இப்படியே விட்டால் இரபேல் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துவிடுமென்று பயந்த மத்திய அரசு. சிபிஜயின் துணை இயக்குநராக மோடியால் நியமிக்கப்பட்ட ராகேஷ் அஸ்தானா மூலம் அலோக் வர்மா மீது குற்றச்சாட்டு கூறவைத்து இரவோடு இரவாக அவர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்திருக்கிறது மோடி அரசு. அதோடு நில்லாமல் யாரிடமும் கலந்து பேசாமல் இரவோடு இரவாக சிபிஜக்கு சிறப்பு இயக்குநர் ஒருவரை நியமித்திருக்கிறது மோடி அரசு. அவர் பதவியேற்ற அன்று இரவே அலோக் வர்மாவின் அறையையும், அவரது வீட்டையும் சோதனை போட்டு சில பைல்களை கைப்பற்றியிருக்கிறார்கள்.
இப்படியாக தனது ஊழலை மறைக்க ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வேலையை மோடி அரசு ஒருபுறம் செய்திருக்கிறது. மறுபுறம் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவலை அதிகார பீடமாக மாற்றும் வேலையை செய்திருக்கிறது.
அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் மக்களுக்காக போடும் திட்டங்களை நிறைவேற்றிட அதிகாரிகள் என்ற அமைப்பு இந்திய ஒன்றியத்தில் உருவாக்கப்பட்டது. இந்த அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. ஆனால் மோடி அரசு பதவியேற்றதிலிருந்து தனது அமைச்சரவை சகாக்களை கலந்தாலோசிக்காமல் அதிகார மட்டத்திலிருப்பவர்கள் மூலம் அனைத்தையும் செய்யும் கேட்டை தெரிந்தே மோடி செய்துவருகிறார். அதற்காகவே தன்னை சுற்றி குஜராதை சேர்ந்த அதிகார்கள் பலரை வைத்திருக்கிறார். உதாரணமாக
2016இல் கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் &2017இல் கொண்டுவந்த சரக்கு மற்றும் சேவை வரி (GST) இந்த இரண்டையும் மோடி அறிவித்த பின்னர்தான் அவரது அமைச்சரவைக்கே தெரியும். இதற்கு பின்னால் இருந்தவர் குஜராத்தை சேர்ந்த ஹஸ்முக் ஆதியா என்ற அதிகாரி தான்.இப்படியாக அதிகாரத்தை மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பறித்து அதிகாரவர்க்கத்திடம் கொடுத்து இந்திய ஒன்றியத்தில் இதுவரை கடைபிடித்து வந்த ஜனநாயகத்தை படுகொலை செய்திருக்கிறார் மோடி. இதன் உச்சம் தான்
அக்டோபர் 25’2018இல் பேசிய தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் டோவல் இந்தியாவில் கூட்டணி அரசு இருக்ககூடாது. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா சில கடினமான முடிவுகளை எடுக்கபோகிறது அதற்கு இங்கு ஒற்றை ஆட்சிதான் தேவை என்று பேசியிருக்கிறார். அதிகாரவர்க்கத்தை சேர்ந்த ஒருவர் இந்தளவு யார் ஆட்சியில் இருக்கவேண்டும் அது எவ்வாறு இயங்க வேண்டுமென்று வெளிப்படையாக பேசுகின்ற ஓர் நிலையை மோடி அரசு செய்திருக்கின்றது.
இதேநிலைமை நீடித்தால் ஓட்டுபோடவேண்டிய அவசியமில்லை அமைச்சர்கள் தேவையில்லை என்று சொல்லி மக்களோடு தொடர்பேயில்லாத அதிகாரிகளின் மூலம் ஆட்சியை நடத்தலாமென்ற இடத்தை நோக்கி மோடி நகர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆகவே மோடி அரசின் இந்த ஜனநாயக படுகொலையை நாம் ஒன்றுகூடி தடுத்தாக வேண்டியது அவசியம்.
மே 17 இயக்கம்
9884072010