பகத்சிங் ஒரு விடுதலைப் போராட்ட வீரராக அரசினால் ஏற்கப்பட்டுள்ளார். அப்படியெனில் அவர் பிறந்தநாளை மாணவர்கள் கொண்டாட எதற்கு அனுமதி பெற வேண்டும்.
ஒரு விடுதலை வீரரை மாணவர்கள் கொண்டாடுவது எப்படி குற்றமாகும்? கல்லூரியிலிருந்து மாணவியை இடைநீக்கம் செய்கிறார்கள் என்றால் பகத்சிங் என்ன தடை செய்யப்பட்ட நபரா?
இந்தியாவின் விடுதலை உழைக்கும் மக்களின் விடுதலையாக இருக்க வேண்டும் என்று மக்களின் விடுதலையை முழங்கிய மகத்தான போராளி பகத்சிங். அவரது பிறந்தநாளை கொண்டாடினால், மாணவர்களுக்கு அநீதியை எதிர்த்து கேள்வி எழுப்பும் துணிவு வந்துவிடும் என்று அரசு அச்சப்படுகிறதா?
மாணவி மாலதி மீதான கோவை அரசு கலைக்கல்லூரி முதல்வரின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. விடுதலை வீரர் பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடக்கூடாது என சொன்ன கல்லூரி முதல்வரின் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே தவிர, மாணவி மீது அல்ல. மாணவி மீதான இடை நீக்கம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.
– மே பதினேழு இயக்கம்
9884072010