சட்டவிரோத மணல் குவாரியை எதிர்த்துப் போராடிய காவிரிஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் நாம் தமிழர் கட்சி தோழர்கள் கைதிற்கு மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்

- in பரப்புரை

குளித்தலையில் சட்டவிரோதமான மணல் குவாரியை எதிர்த்துப் போராடிய காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 14 பேரை சிறையில் அடைத்திருக்கும் தமிழக அரசின் அராஜகப் போக்கினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள மணத்தட்டையில் சட்ட விரோதமாக மணல் குவாரி இயங்கி வருகிறது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையால் உருவாக்கப்பட்ட ஆய்வுக்குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில், ‘மணத்திட்டை மணல் குவாரி அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 430 மீட்டர் துரத்திலே மணப்பாறை கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுவதால், மணத்திட்டை மணல் குவாரிக்கு வழங்கிய அனுமதி செல்லுபடியாகாது’ என உயர் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை மீறியும், மணப்பாறை மக்களின் குடிநீர் தேவையை பொருட்டபடுத்தாமலும் இயங்குகின்ற சட்ட விரோத மணல் குவாரியை மூடக்கோரி, 12-10-2018 அன்று குவாரியை முற்றுகையிட்ட காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் ராஜேஸ்வரி மற்றும் குளித்தலை நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் தோழர் சீனி.பிரகாசு மற்றும் அக்கட்சியின் தோழர்கள் 13 பேர் என மொத்தம் 14 தோழர்களை கைது செய்து, அடக்குமுறையின் உச்சமாக சிறையிலடைத்திருக்கிறது எடப்பாடி அரசு.

காவிரி ஆறினை பாதுகாத்திடவும், மக்கள் உரிமைக்காகவும் போராடியவர்களை சிறையில் அடைத்திருக்கும் எடப்பாடி அரசை மே பதினேழு இயக்கத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக எடப்பாடி அரசே!
கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ள இரண்டு பெண்கள் உட்பட 14 தோழர்களையும் உடனடியாக விடுதலை செய்!.

– மே பதினேழு இயக்கம்
9884072010

 

 

Leave a Reply