நக்கீரன் கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரை சந்தித்து பேசுவதற்காக சென்ற மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மிக மோசமான அடக்குமுறையாகும்.
நக்கீரன் கோபால் அவர்களை சந்தித்து பேசுவதற்கு, அவர் கொண்டு செல்லப்பட்டிருக்கிற சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு வைகோ அவர்கள் சென்றார். வைகோ அவர்கள் தான் ஒரு வழக்கறிஞராக வந்திருக்கிறேன் என்று தெரிவித்த போதிலும், அவரை நக்கீரன் கோபாலை சந்திக்க விடாமல் காவல்துறை தடுத்ததோடு, கைதும் செய்திருக்கிறது.
பாசிசம் தனது கோர முகத்தினை காட்டிக் கொண்டிருக்கிறது. நக்கீரன் கோபாலை சந்திக்க விடாமல் வைகோ அவர்களை தடுத்ததும், கைது செய்ததும் ஜனநாயக விரோத செயலாகும். இதனை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
– மே பதினேழு இயக்கம்