பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்தியா முழுதும் உள்ள பத்திரிக்கையாளர்களும், ஜனநாயக சக்திகளும் பாசிசத்தினை எதிர்த்திட ஒன்றிணைந்து நிற்க வேண்டிய மிக முக்கியமான தேவை எழுந்துள்ளது.
பேராசிரியர் நிர்மலாதேவி மற்றும் ஆளுநர் பன்வாரிலால் குறித்து வந்த கட்டுரை வெளியிட்டதற்காக ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகார் மற்றும் அழுத்தத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. புனே செல்வதற்காக விமான நிலையம் சென்ற நக்கீரன் கோபால் அவர்களை விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்திருக்கிறார்கள்.
ஜனநாயகம் எத்தனை மோசமாக சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியாக நக்கீரன் கோபால் அவர்களின் கைது இருக்கிறது. மிக மோசமான அடக்குமுறைகள் இங்கு மனித உரிமை செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், கலைஞர்கள் என அனைவரின் மீதும் ஏவப்பட்டுக் கொண்டிருக்கிறது. மோடியை எதிர்த்துப் பேசும் அனைவர் மீதும் தேசத்துரோக வழக்கு போடுவார்கள் என்றால் எத்தனை கோடி பேருக்கு சிறைச்சாலைகளை இந்த அரசு கட்டி வைத்திருக்கிறது? மோடி அரசையும், தமிழ்நாட்டில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் ஆளுநரையும், எடப்பாடி அரசையும் எதிர்த்துப் பேசவோ, எழுதவோ கூடாதென்றால் இங்கு என்ன மன்னராட்சியா நடக்கிறது?
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை விசாரிக்கச் சொல்வது குற்றமென்றால் அனைவரும் சேர்ந்து சொல்வோம். நிர்மலா தேவி விவகாரத்தில் தமிழக ஆளுநரை விசாரி!
நக்கீரன் கோபால் அவர்கள் மீது ஏவபப்ட்டிருக்கும் இந்த அடக்குமுறையினை மே பதினேழு இயக்கம் மிகக் கடுமையாக கண்டிக்கிறது. நக்கீரன் பத்திரிக்கைக்கும், அதன் பத்திரிக்கையாளர்களுக்கும்,
கருத்துரிமையினையும், ஜனநாயகத்தினையும் காத்திட இந்திய ஒன்றியம் முழுதும் உள்ள செயல்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிணைவோம்!
– மே பதினேழு இயக்கம்
9884072010