அயர்லாந்தின் பாராளுமன்ற உறுப்பினரும், அயர்லாந்து இடதுசாரி குடியரசுக் கட்சியான சின் ஃபெயின் Sinn Féin’ ன் னுடைய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளருமான சீன் க்ரொவ் Seán Crowe TD இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர் திருமுருகன் காந்தியின் கைது மற்றும் சிறையடைப்பை எதிர்த்து பேசியுள்ளார்.
அதில்,
“திருமுருகன் காந்தி ஆகஸ்ட் மாதம் ஐநா மனித உரிமை ஆணையத்தில் தூத்துக்குடியில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 போராட்டக்காரர்கள் உயிரிழந்ததை பதிவு செய்துவிட்டு திரும்பி செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறேன். அவரின் கைது மற்றும் அவர்மேல் சுமத்தப்பட்டுள்ள தேசத்துரோக வழக்குகள் அரசியல் நோக்கத்துடன் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்யவும் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை மறுபரிசீலனை செய்யவும் இந்திய அதிகாரிகளுக்கு நான் வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
————————–
Sinn Fein கட்சிக்கும், Sean Crowe அவர்களுக்கும் மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.