Communists and class-conscious workers in Russia (Russian Communist workers Party) இந்தியாவிலுள்ள மாநிலமான தமிழ்நாட்டில் நடைபெறும் மக்களின் போராட்டத்தை ஆதரிக்கிறது.
வேதாந்தா என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் செம்பு ஆலையான ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பதால் அதனை மூடவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.
Vedanta Resources plc, பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமாகும். தமிழ்நாடு சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணையம் அதன் முதலாவது ஆலையை மூட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்றம் பொது விசாரணை மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் முடிவின்படி திட்டத்தின் இரண்டாம் நிலை கட்டுமானத்தையும் நிறுத்த உத்தரவிட்டது.
மே 22 ஆம் தேதி காப்பர் ஆலையை மூடவேண்டும் என்று அமைதியாக நடந்த பேரணியில் காவல்துறை வன்முறையை கட்டவிழ்த்து தமிழ்நாட்டு மக்களை சுட்டுக்கொன்றிருக்கிறது.
இந்தியாவின் மனித உரிமை செயற்பாட்டாளர் திருமுகன் காந்தி ஜெனீவாவில் தமிழ்நாட்டிலிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை பற்றிப் பேசியதற்காக, அங்கிருந்து திரும்பும்போது தோழர் திருமுருகன் காந்தி இந்திய விமான நிலையத்தில் ஜூலை மாதம் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தோழர் திருமுருகன் காந்தி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
உருக்காலையை மூடுவதை கோரிய மக்களை துன்புறுத்துவதையும், ஒடுக்குவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
திருமுருகன் காந்தி மீதான அடக்குமுறையை கைவிடுங்கள்!
S.S மாலென்கோவ், மத்திய கமிட்டி செயலாளர், ரஷ்யா தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி (RKRP-CPSU)
Thanks to RKRP-CPSU from May 17 Movement
————————–
Коммунисты и сознательные трудящиеся России поддерживают справедливое требование жителей штата Тамил-Наду в Индии: закрыть экологически вредное производство – медеплавильный завод, принадлежащий компании Vedanta Resources plc, зарегистрированной в Великобритании.
Нам известно, что Комиссия экологического контроля Тамил-Наду распорядилась о немедленном закрытии медеплавильного завода №1 в Тутикорине, а Верховный Суд Мадраса приказал компании остановить строительство второй очереди проекта до проведения публичных слушаний и экологического освидетельствования.
Вызывает возмущение жестокая расправа полиции, которая 22 мая с. г. расстреляла мирных демонстрантов – жителей штата Тамил-Наду, требовавших закрытия медеплавильного завода.
Мы требуем немедленно освободить из-под ареста индийского активиста Ганди, арестованного в июле в индийском аэропорту после его возвращения из Женевы, где он участвовал в публичной встрече по вопросу закрытия медеплавильного завода в Тамил-Наду.
Требуем немедленно прекратить преследования людей, справедливо требующих закрытия медеплавильного завода!
Руки прочь от товарища Ганди! Нет произволу и насилию властей!
Секретарь ЦК РКРП-КПСС Маленцов С. С.