தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கை:
மத்திய மாநில அரசுகளை எதிர்த்தால் வஞ்சம் தீர்க்க வழக்குகளைப் பாய்ச்சி அடக்குமுறையை ஏவுவதா? – சீமான் கண்டனம்
அரசுக்கு எதிராகப் போராடும் பேசும் அரசியல் பிரமுகர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல என்றாலும்கூட, தனிமனித வஞ்சம் தீர்க்கம் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திச் சனநாயகத்தின் மூலமே அடக்குமுறைகளை ஏவுகிற அரசப்பயங்கரவாதப்போக்கினை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்பி திருமுருகன் காந்தியின் மீது பல்வேறு வழக்குகள் வேண்டுமென்றே தொடுக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டிருக்கிற
நேற்று விடுதலையான கருணாசு மீது ஐ.பி.எல். முற்றுகைப்போராட்டத்தின்போத
தம்பி திருமுருகன் காந்தியைச் சிறைப்படுத்தியிருக்கிற தமிழக அரசு, தம்பி கருணாசின் பேச்சை முன்வைத்து அவரைக் கைது செய்த தமிழக அரசு, காவல்துறையினரையும், உயர் நீதிமன்றத்தையும் கொச்சையான சொற்களில் இழித்துரைத்த எச்.ராஜாவைக் கைதுசெய்யாதது ஏன்? அவரைக் கைதுசெய்வதற்கென அமைக்கப்பட்ட தனிப்படை என்னவானது? எட்டுவழிச் சாலைக்கெதிராக முகநூலில் கருத்துத் தெரிவித்தவர்களையும், அதற்கெதிராய் சென்னை காந்தி மண்டபத்தில் பட்டினிப்போராட்டம் நடத்த முற்பட்டவர்களையும்கூடக் கைதுசெய்து சிறைப்படுத்துகிற தமிழக அரசு, இவ்விவகாரத்தில் தயக்கம் காட்டுவது ஏன்? முதல்வரை அவதூறாகப் பேசினாரெனக் கருணாஸ் மீது தொடுக்கப்பட்ட வழக்கு, முதல்வரையும், துணை முதல்வரையும் ‘ஆண்மையற்றவர்கள்’ என விமர்சித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது ஏன் தொடுக்கப்படவில்லை.? ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களையும் மிகத் தரக்குறைவாக முகநூலில் விமர்சித்த எஸ்.வி.சேகர் காவல்துறையின் பாதுகாப்போடு பொதுவெளியில் உலா வந்தாரே அவரைக் கைதுசெய்ய மறுத்த மர்மம் என்ன? தங்கை சோபியா விமானத்திற்குள் முழக்கமிட்டதற்குக் கைது நடவடிக்கையைப் பாய்ச்சியவர்கள், சேலத்தில் பொதுமக்களைச் சந்தித்துக் கருத்துக் கேட்டதற்கு எங்களைக் கைதுசெய்தவர்கள், கரூரில் எமது கட்சிப் பிள்ளைகள் ஆற்றைத் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்குக் கைது நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் எஸ்.வி.சேகர், எச்.ராஜா, குருமூர்த்திப் போன்றோருக்கு விதிவிலக்குத் தந்து பாதுகாப்பது என்பது சனநாயகத் துரோகம் இல்லையா?
மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகப் போராடுபவர்கள், பேசுபவர்கள் மீது பொய் வழக்குகள் போடுவதை நிறுத்தி தம்பி திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். தமிழக அரசின் ஒருதலைபட்சமான, பாரபட்சமுள்ள இந்நடவடிக்கைகள் யாவும் மக்களுக்குச் சட்டத்தின் மீது நம்பிக்கையைக் குலைக்கும் கொடுஞ்செயலாகும். இவையாவற்றையும் தமிழக மக்களும், படித்த ஒரு இளந்தலைமுறை கூட்டமும் மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆளும் அரசின் அத்துமீறல் போக்குகளுக்கும், அடிமை ஆட்சிமுறைக்கும் வருங்காலத்தில் முடிவுகட்டுவார்கள் என எச்சரிக்கிறேன்.
சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி
————————–
திரு.சீமான் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.