ராஜீவ் கொலை என்பதை தமிழர்கள் மீதான அழிக்க முடியாத பழியாக மாற்ற நினைக்கிறது மத்திய அரசு.
28 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவிப்பதை விட மிகப் பெரிய கொடுமை ஏதேனும் இருக்க முடியுமா?
தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும், ஏழ்வரை விடுவிக்க ஆளுநர் மறுக்கிறார் என்றால் இங்கு நடப்பது சட்ட விரோதம் அல்லவா?
ஏழ்வர் விடுதலையை தடுத்திட ஆளுநருக்கு உரிமையில்லை. தமிழ்நாட்டின் மாநில உரிமை மிதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவினை ஆளுநர் நிறைவேற்றியாக வேண்டும் என முழங்கிட வாருங்கள்.
பெரும் திரளாய் கூடுவோம் தமிழர்களே! 2011ல் தமிழ்நாடு முழுதும் தமிழர்கள் எழுந்து நின்று மூன்று பேரின் தூக்குக் கயிற்றினை அறுத்தோம்.
இப்போது மத்திய அரசு அவர்களை வாழ்நாள் முழுதும் சிறைவைக்கத் துடிக்கிறது. சிறை மீட்க புறப்படுவோம்!
தாமதிக்கப்படும் நீதி, அநீதியை விட கொடுமையானது. அநீதிக்கு எதிராக ஒன்று கூடுவோம். நண்பர்களை அழைத்து வாருங்கள்.
மே பதினேழு இயக்கம் அழைக்கிறது. செப்டம்பர் 29, சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கூடுவோம்.
– மே பதினேழு இயக்கம்
9884072010