தமிழ் மொழிக்காகவும், தமிழ் வழிக் கல்விக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் தன் வாழ்நாள் முழுதும் உழைத்த மொழிப் போராட்ட வீரரும், தமிழ்த்தேசிய உணர்வாளருமான ஐயா புலவர் கி.த.பச்சையப்பன் அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் மற்றும் தோழர்கள் ஐயாவிற்கு இறுதி வணக்கத்தினையும், புகழ் அஞ்சலியையும் செலுத்தினர்.
ஐயா கி.த.பச்சையப்பன் போன்ற போராளிகளின் லட்சியத்தினை அடுத்த தலைமுறை ஏந்திச் செல்ல அனைவரும் உறுதியேற்போம்.
மே பதினேழு இயக்கம் தனது புகழ் வணக்கத்தினை ஐயாவிற்கு செலுத்துகிறது.


