83 வயதிலும், ஏற்கனவே நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தாலும் கூட தளராமல் புன்னகையுடன் வந்து அனைத்து போராட்டங்களிலும் முன்னணியில் நிற்பார்.
தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல சீரிய பணிகளை ஆற்றியுள்ளார். மொழி அறிஞராக இருந்தாலும், ஒரு அறிஞர் என்ற அடையாளத்தோடு மட்டுமே தன்னை நிறுத்திக் கொள்ளாமல் தமிழினத்தின் அனைத்து போராட்டங்களிலும் ஒரு போராளியாக நிற்பார்.
மே பதினேழு இயக்கத்தின் கூட்டங்களில் பேசும் போதெல்லாம், உங்களைப் பார்க்கையில் நானும் இளைஞனாகவே மாறிவிடுகிறேன் என்று சொல்லி உற்சாகப்படுத்துவார்.
பச்சைத்துண்டும், முறுக்கு மீசையுடனும், ஒரு கைப்பையுடன் தமிழ்நாடு முழுக்க சுற்றியவர். தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தவர். தமிழ் வழிக் கல்விக்காக பல போராட்டங்களை நடத்தினார்.
ஓய்வில்லாமல் உழைத்த போராளிக்கு மே பதினேழு இயக்கம் தனது புகழ் வணக்கத்தினை செலுத்துகிறது.
– மே பதினேழு இயக்கம்