திருமுருகன் காந்தி மீதான ஊபா வழக்கு செல்லாது-நீதிமன்றம்.

- in பரப்புரை

பாலஸ்தீன் குறித்தான ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்கு திருமுருகன் காந்தி மீது UAPA எனும் கொடூரமான கருப்பு சட்டம் பதியப்பட்டிருந்தது.

எழும்பூர் நீதிமன்றம் அந்த வழக்கில் திருமுருகன் காந்தியை கைது செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தது. அரசு தரப்பில் இருந்து திருமுருகன் காந்தியை அந்த வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இன்று அந்த வழக்கிற்காக எழும்பூர் நீதி மன்றத்திற்கு திருமுருகன் காந்தி வேலூர் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டார்.

இறுதியில் இன்று(17-9-18) ஆணையை வெளியிட்ட நீதிபதி, ஊபா சட்டத்தினை திருமுருகன் காந்தி மீது போட்டது செல்லாது என்று அறிவித்தார்.

பிறகு ஊபா வழக்கானது IPC வழக்கிற்கு மாற்றப்பட்டு பிரிவு 505(1)(b)-ல் வழக்கு பதியப்பட்டு, UAPA வழக்கு நீக்கப்பட்டது.

திருமுருகன் காந்தி மீதான ஊபா வழக்கு செல்லாது-நீதிமன்றம்.

Leave a Reply