09-09-18 ஞாயிறு மாலை சென்னை புரசைவாக்கத்தில் UAPA எதிர்ப்பு பொதுக்கூட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பாக நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் UAPA சட்டத்தில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நாடு முழுதும் மனித உரிமைகள் ஆர்வலர்களை, இசுலாமியர்களை, தலித்துகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்க UAPA சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து விளக்கப்பட்டது. UAPA சட்டத்தினை ஒழித்திட வேண்டும் என்றும் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.
திருமுருகன் காந்தி மீது UAPA வழக்கு போடப்பட்டிருப்பதைக் கண்டித்து, அவரை விடுதலை செய்யக் கோரிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.