மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள UAPA எனும் ஊபா வழக்கிற்காக எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நேற்று UAPA வழக்கில் திருமுருகன் காந்தியை கைது செய்ய நீதிபதி மறுத்து அரசு தரப்பில் பதிலளிக்க கேட்டிருந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் அந்த வழக்கிற்காக திருமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் உரையாற்றியதற்காக திருமுருகன் காந்தி Look Out notice கொடுக்கப்பட்டு, பெங்களூர் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட விதம் குறித்தும், பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகும், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கினை வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட விதம் குறித்தும், அவரை நீண்ட காலம் சிறையில் வைக்க இந்த அரசுக்கு உள்ள நோக்கம் குறித்தும் திருமுருகன் காந்தி சார்பாக வழக்கறிஞர்கள் எடுத்துரைத்தனர். தினமும் அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்படுவது குறித்தும் தெரிவித்தனர்.
அவர் மீது UAPA வழக்கு போடப்பட்டதில் உள்ள குளறுபடிகள் குறித்தும், அது பொருந்தாத வழக்கு என்றும் எடுத்துரைத்தனர்.
பின்னர் அரசு வழக்கறிஞர் வந்து, காவல்துறை ஆணையரிடம் அறிக்கை பெறுவதற்கு 10 நாட்கள் கால அவகாசம் தேவை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் உடனடியாக UAPA வழக்கில் ரிமாண்ட் செய்ய மறுத்த நீதிபதி, அறிக்கையைப் பெறுவதற்கு கால அவகாசம் அளித்து, விசரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.
நீதி இன்னும் மிச்சமிருக்கிறது என்ற நம்பிக்கையில் 14-ம் தேதி விசாரணையை எதிர்பார்த்திருக்கிறோம்.