திருமுருகன் காந்தி UAPA ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோவையில் 25-8-18 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
ஊபா எனும் மிகக் கொடிய சட்டமானது மனித உரிமை செயல்பாட்டாளர்களை முடக்க பயன்படுத்தப்படுவதைக் கண்டித்தனர். திருமுருகன் காந்தி மீது நிகழ்த்தப்படும் சட்டவிரோத அடக்குமுறைகளையும் கண்டித்தனர்.
4 தேசத்துரோக வழக்குகளும், ஊபா சட்டமும் போடும் அளவிற்கு திருமுருகன் காந்தி என்ன பயங்கரவாதியா? எதற்காக அவர் மீது இத்தனை அடக்குமுறைகள்? எதற்காக தினந்தோறும் வழக்குகள் போடப்படுகின்றன? தூத்துக்குடி படுகொலையைப் பற்றி ஐ.நாவில் பேசியதற்கும், அவரது தொடர்ச்சியான போராட்டங்களுக்காகவும் அவர் மத்திய பாஜக அரசினால் பழிவாங்கப்படுகிறார் என்று தெரிவித்தனர்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளார் கோவை ராமகிருட்டிணன், திராவிடர் தமிழர் கட்சியின் தோழர் வெண்மணி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர் மோகன்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் இலக்கியன், SDPI கட்சியின் தோழர் முஸ்தபா, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தோழர் பாபு, தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் இளவேனில், தமிழர் விடியல் கட்சியின் தோழர் நவீன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.