திருமுருகன் காந்தி அவர்களின் வழக்கு செலவுகளுக்கும், இயக்கத்தின் அடுத்த கட்ட வேலைகளுக்கும் நிதிப் பங்களிப்பினை கோருகிறோம்

- in பரப்புரை

**திருமுருகன் காந்தி அவர்களின் வழக்கு செலவுகளுக்கும், இயக்கத்தின் அடுத்த கட்ட வேலைகளுக்கும் நிதிப் பங்களிப்பினை கோருகிறோம் – மே பதினேழு இயக்கம்**

தூத்துக்குடி படுகொலையை ஐ.நா மனித உரிமைகள் அவையில் பேசியதற்காக பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்னரும், மீண்டும் கைது செய்யப்பட்டு. தினந்தோறும் பல்வேறு வழக்குகள் தோழர் திருமுருகன் காந்தி மீது போடப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக போராடியதற்காக இன்று திருமுருகன் காந்தி பல்வேறு வழக்குகளில் வேலூர் சிறையில் இருக்கிறார்.

நாகர்கோயில், தூத்துக்குடி, சீர்காழி, சென்னை என பல்வேறு நீதிமன்றங்களில் திருமுருகன் காந்தி குறித்தான வழக்குகள் நடைபெற்று வருகின்றன. தோழர் திருமுருகன் காந்தி மீதான வழக்குகளை நடத்துவதற்கும், தமிழ்நாட்டின் வாழ்வாதார சிக்கல்கள் குறித்து அடுத்தகட்ட பிரச்சாரங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கும் பெருமளவிலான நிதிச்சுமை மே பதினேழு இயக்கத்திற்கு இருக்கிறது. இதற்காக மே பதினேழு இயக்கத்தின் இயக்க அரசியல் நிலைப்பாடுகளோடு உடன்படுகிற அனைவரிடமும் நிதிப் பங்களிப்பினை எதிர்பார்க்கிறோம்.

கீழ்காணும் வங்கிக் கணக்கில் உங்களால் இயன்ற பங்களிப்பினை செலுத்தலாம்.

A/C Name: Nimir Publications
Bank: Karur Vysya Bank
Branch: Ashok Nagar
A/c no : 1278115000007792
A/C Type: Current
IFSC code : KVBL0001278

பணம் அனுப்பிய பின், அனுப்பிய தொகை குறித்த விவரங்களை தவறாமல் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். 9884072010 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

பின்குறிப்பு: தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் மட்டுமே நிதிப் பங்களிப்பினை எதிர்பார்க்கிறோம். ஈழத் தமிழர்களிடம் நிதி உதவி பெறுவதை அறம் சார்ந்து மறுக்கிறோம்.
வெளிநாட்டு வங்கிக் கணக்குகளிலிருந்து நிதி உதவி பெறுவது என்பது இயலாது. வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழ்நாட்டுத் தோழர்கள் நிதிப் பங்களிப்பு செய்ய விரும்பினால், இந்தியாவில் உள்ள உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாக அனுப்பி வைக்கவும்.

– மே பதினேழு இயக்கம்
முகநூல்: https://www.facebook.com/mayseventeenmovement/
இணையதளம்: http://www.may17iyakkam.com/
9884072010

Leave a Reply