தஞ்சையில், தோழர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி மே பதினேழு இயக்கத்தின் சார்பாக 21-8-2018 செவ்வாய் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது.
இப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழ்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், தமிழர் தேசிய முன்னனியின் பொதுச் செயலாளர் ‘ஐயனாபுரம்’ முருகேசன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் தலைவர் அரங்க. குணசேகரன், தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் பொறியாளர். திருநாவுக்கரசு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள் தமிழ்ச் செல்வன் மற்றும் பாஸ்கர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தோழர் விஸ்வா செந்தில், மனிதநேய மக்கள் கட்சியின் தோழர்கள் அப்துல் ஜபார் மற்றும் லுக்மான், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தோழர் முகம்மது உசேன், மே பதினேழு இயக்கத்தின் தோழர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு தோழர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்யக்கோரினர்.
மேற்கூறிய தலைவர்கள் தமிழ்நாட்டில் நிலவுகின்ற அறிவிக்கப்படாத அவசரநிலையை சுட்டிக்காட்டி, ஜனநாயக விரோதமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். அரசியல் அமைப்புகளுக்குரிய ஜனநாயக உரிமைகளை தமிழக அரசு உத்திரவாதப்படுத்தக் கோரினர்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.