தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் 9 தோழர்கள் ரிமாண்ட் செய்துள்ளது தமிழக அரசு. இந்த அடக்குமுறையினை மே பதினேழு இயக்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்கிலிருந்து விடுதலை செய்யக் கோரி ராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த தோழர்கள் கைது செய்யப்பட்டு 9 பேர் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இது மிகப் பெரும் அரச வன்முறையாகும். அந்த 9 பேரும் சமூகத்தில் மக்களுக்காக போராடுகிற போராளிகள். அநீதிகளை எதிர்த்து சமூக நீதியினை வலிமைப்படுத்திட களத்தில் நிற்பவர்கள். தந்தை பெரியாருக்கு மாலை அணிவித்தால் கைது செய்யும் உரிமையை இந்த அரசுக்கு யார் தந்தது?
பாஜகவின் முழுமையான கையாளாக எடப்பாடி அரசு மாறி சமூகத்தில் போராடுபவர்கள் மீது வன்முறையை ஏவிக்கொண்டிருக்கிறது. காட்டாட்சிகள் நிலைத்ததாய் வரலாறுகள் இல்லை. இந்த அரச அடக்குமுறைக்கு எதிராக அனைத்து சக்திகளும் கைகோர்த்து நிற்க வேண்டிய காலம் நெருங்கி இருக்கிறது. பார்ப்பனியம் தான் அரசின் கொள்கை என்பதை இந்த கைதுகள் நிறுவிக் கொண்டிருக்கின்றன.
அனைவரும் ஒன்றிணைந்து நின்று இந்த கைதுகளை கண்டிப்போம். பாஜக-எடப்பாடி அடாவடி கூட்டணி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர்களை சிறையில் அடைப்பதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
– மே பதினேழு இயக்கம்