தோழர் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு.
எது தேசத்துரோகம்? என்ன செய்தார் தோழர் திருமுருகன் காந்தி?
ஸ்டெர்லைட் முதலாளிக்காக 13 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு சர்வதேச அளவில் நீதி கேட்டார்.
எட்டு வழி சாலை எதற்காக என்று கேள்வி கேட்டார்.
காவிரி நீர் உரிமைக்காக போராடினார்.
தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்திற்கு எதிரான சுரண்டல்களை எதிர்த்து போராடினார்.
ரேசன் கடைகளை மூடும் WTO ஒப்பந்தத்தினை அம்பலப்படுத்தினார்.
தற்சார்பு பொருளாதாரத்தின் அவசியம் குறித்து பேசினார்.
தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டங்களை நடத்தினார்.
இதில் எது தேசத்துரோகம்?
தமிழர் உரிமைக்காக போராடினால் தேசத்துரோகமா?
நமக்காக பேசிய நம் தோழர் மீது பிரிவு 124-Aன் கீழ் தேசத்துரோக வழக்கு போடப்பட்டிருக்கிறது.
மோடியின் பாஜக அரசும், எடப்பாடி அரசும் சேர்ந்து தமிழர் உரிமைக்காக போராடி வரும் தோழர் திருமுருகன் காந்தியையும், மே பதினேழு இயக்கத்தினையும் முடக்க முயல்கிறார்கள்.
இந்த அநீதிக்கு எதிராக அனைத்து மக்களும், ஜனநாயக அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும் என மே பதினேழு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு மே பதினேழு இயக்கம் ஒருபோதும் அடிபணியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டின் உரிமைக்காக, வாழ்வாதாரத்திற்காக தொடர்ந்து போராடுவோம்.
-மே பதினேழு இயக்கம்
9884072010