தமிழக சுகாதாரத்துறையை சிதைக்க திட்டம்போட்டு செயல்படும் மத்திய அரசு
நீட் எனும் அரக்கனை தமிழகத்தில் புகுத்தி நன்றாக இருந்த தமிழக சுகாதாரத்துறையில் மிகப்பெரிய அழிவை உண்டாக்கிய மத்திய அரசு, இப்போது சத்தமேயில்லாமல் தனது அடுத்தகட்ட துரோகத்தை செய்திருக்கிறது. அதாவது இந்தாண்டில் தமிழ்கத்திலிருந்து நீட் தேர்வு எழுதிய 1,14,602பேரில் 45,336பேர் மருத்து கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதி பெற்றிருக்கிறார்கள். அதாவது நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். (அதாவது தேர்ச்சி பெற வேண்டிய மதிப்பெண்ணை வெகுவாக குறைத்ததனால் இவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது வேறு செய்தி) ஆனால் தமிழகத்தில் இருப்பதோ 5660இடங்கள் மட்டுமே. இதனால் கிட்டதட்ட 40,000பேர் தேர்ச்சி பெற்றும் இடம் கிடைக்காத சூழல் இருக்கிறது. இவர்கள் தனியார் மருத்துவ கல்விநிலையங்களை நோக்கி போக வேண்டுமென்று மத்திய அரசு திட்டமிட்டு இப்படி செய்திருக்கிறது.
மேலும் தமிகத்தில் வருடவருடம் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதை கணக்கில் கொண்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி, மதுரை அரசு மருத்துவகல்லூரி மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரிகளில் முறையே 150 & 250 & 150 மருத்துவ இடங்களை அதிகரித்துக்கொள்ள மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்திடம் தமிழக அரசு அனுமதிம் கேட்டிருந்தது. இதனை மே 31,2018 அன்று மத்திய அமைச்சகம் நிராகரித்துவிட்டது. இதனால் தமிழக மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய 550மருத்துவ இடங்களை மத்திய அரசு மறுத்து விட்டது.
அதேநேரத்தில் தமிழகத்தில் இயக்குகிற தனியார் மருத்துவகல்லூரியான செட்டிநாடு மருத்துவமனைக்கு மருத்துவ இடங்களை அதிகரித்துக்கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறது. இதன்மூலம் மருத்துவம் படிக்கவிரும்பும் மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் அரசு கல்லூரிகளில் படிப்பதை நிறுத்து பல லட்சங்களை தனியாருக்கு கொடுக்க வழிவகை செய்திருக்கிறது மத்திய அரசு.
ஏற்கனவே நீட் எனும் தகுதி தேர்வை கொண்டுவந்து தனியார் கோச்சிக் செண்டர்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு. உதாரணத்திற்கு நடந்த முடிந்த 2018ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வில் முதல் பத்து இடங்களில் 7இடங்களில் வெற்றி பெற்றவர்கள் ஆகாஷ் கோச்சிங் செண்டர் (Aakash Institution) என்ற தனியார் நிறுவனத்தில் பயின்றவர்கள். இந்த நிறுவனத்தில் படித்த 61,649பேர் இந்த வருடம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இங்கு குறைந்தபட்ச கட்டணமே லட்சங்களில் தான் ஆரம்பிக்கிறதென்று அவர்கள் இணையத்திலேயே போட்டிருக்கிறார்கள். https://www.aakash.ac.in/அப்படியென்றால் இவர்கள் கடந்த மூன்றாண்டுகளில் சம்பாதித்த பணம் எவ்வளவு இருக்குமென்று கணக்கு போட்டு பாருங்கள். இதுதவிர இவர்களை போல இன்னும் எண்னெற்ற தனியார் கோச்சிங் செண்டர்கள் இருக்கிறது அவர்கள் சம்பாதித்த வருமானம் எவ்வளவு இருக்குமென்றூ யோசித்து பாருங்கள்.
இப்படி தனியார் முதலாளிகளை வாழவைக்க கடந்த 50ஆண்டுகளாக சிறுக சிறுக வளப்படுத்திய தமிழக சுகாதார கட்டுமானத்தையே சிதைத்திருக்கிறது இந்த மத்திய மோடி அரசு.