தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினைக் கண்டித்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் சேலத்தில் 24-5-18 வியாழன் அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தோழர்களும் பங்கேற்றனர்.
வேதாந்தாவின் ஆளாகவு, பாஜகவின் பினாமியாகவும் செயல்படும் எடப்பாடி-பன்னீர்செல்வம் அரசு பதவி விலக வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக மூடப்பட வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.

