ஒரு மிகப் பெரிய பாசிச நடவடிக்கை இங்கே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நுழைந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கக் கூடாது என்ற காரணத்தை சொல்லித்தான் வேல்முருகன் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி சம்பவத்திற்காக கைது செய்யப்பட்ட செய்தி வெளியில் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவரை உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடி வழக்கில் தற்போது ரிமாண்ட் செய்திருக்கிறார்கள். பாஜகவின் அடியாளாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பன்னீர்செல்வம் கூட்டு அரசு என்பது எத்தகைய மோசமான அரசு என்பதை இந்த செயல் காட்டுகிறது.
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கூட முறையாக வெளியிடாமல் மறைத்து வைத்திருக்கிறது. அதனால்தான் உள்ளே சந்திக்க செல்பவர்களை அனுமதிக்காமல் அடக்குமுறையை ஏவுகிறது. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் எழுந்து நின்று போராடியாக வேண்டும்.
ஊடகங்களே! வேல்முருகன் தூத்துக்குடி மக்களை சந்திக்கச் சென்றதற்காக கைது செய்யப்பட்டார் என்ற உண்மையை பேசுங்கள். அவர்களை சந்திக்கச் சென்றதற்காகவே தற்போது சுங்கச் சாவடி வழக்கைக் காட்டி கைது செய்திருக்கிறார்கள் என்பதை பேசுங்கள்.
தமிழக அரசின் பாசிச நடவடிக்கைகளை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
– மே பதினேழு இயக்கம்