காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏற்கனவே அறிவித்தபடி மே17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் அங்கம் வகிக்கக்கூடிய தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பாக சென்னை தமிழர் கடல் (மெரினா) உழைப்பாளர் சிலை அருகே மாபெரும் தமிழர் ஒன்றுகூடல் வரும் ஞாயிறு (29.05.18) மாலை 2மணியளவில் நடைபெறும் என்பதனை உறுதிபடுத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
எனவே தமிழரின் உரிமையான காவிரியை மீட்க விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், வணிகர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் என அனைத்து தரப்பினர குடும்பம் குடும்பமாக வரும் ஞாயிறு அன்று சென்னை தமிழர் கடல் உழைப்பாளர் சிலையருகில் ஒன்று கூட தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பாக மே17 இயக்கம் அழைப்பு விடுக்கிறது.
நம் உரிமையை மீட்க லட்சலட்சமாய் சாதி,மதம் கட்சி தாண்டி ஒன்றுகூடுவோம் வாருங்கள் தமிழர்களே.