காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியின் காரணமாக சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவதாலும், பல்வேறு நோய்களுக்கு உள்ளாவதாலும், இறக்குமதியை அங்கு தடை செய்ய வலியுறுத்தி SDPI கட்சி காரைக்காலில் நடத்திய முற்றுகைப் போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது. மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கண்டன உரையாற்றினார். பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும், தோழர்களும் பங்கேற்றனர்.
நாகூர், மேலவாஞ்சூர், கீழ்வாஞ்சூர், திருப்பட்டினம், திட்டச்சேரி பகுதிகளில் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவதாக தெலிவித்தனர்.
SDPI கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தெகலான் பாகவி தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.