SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் உச்சநீதிமன்ற தீர்ப்பினைக் கண்டித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை வலுப்படுத்தி அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணை 9-ல் சேர்த்திட வலியுறுத்தியும் ரயில் மறியல் போராட்டம் இன்று 21-4-2018 பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் SDPI கட்சியின் தோழர் தெகலான் பாகவி, தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் நாகை திருவள்ளுவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் தபசி குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், தமிழர் விடியல் கட்சியின் தோழர் டைசன், காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் தஞ்சை தமிழன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, மக்கள் அரசுக் கட்சி, தமிழக மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன. மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி, பிரவீன் குமார் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். ரயில் மறியலில் ஈடுபட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு ஏழு கிணறு அருகே உள்ள சமூக நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.