காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 14 – 4 – 2018 சனிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் கோவை டாடாபத் அருகில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளான இன்று தோழர்கள் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இப்போராட்டத்தில் காவிரி உரிமை மீட்க இயக்க தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
தமிழகத்தின் காவிரிநீர் உரிமையில் மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் இழைக்கும் அநீதியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கு.ராமகிருஷ்ணன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.