தாம்பரத்தில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்க எழுச்சிப் பொதுக்கூட்டம்

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையான 378 டி.எம்.சி என்பது 192 ஆக குறைக்கப்பட்டு, அது தற்போது 177.25 டி.எம்.சியாக உச்சநீதிமன்றத்தினால் குறைக்கப்பட்டிருப்பது அநீதி என்பதை முன்னிறுத்தியும், 378 டி.எம்.சியே எங்கள் கோரிக்கை என்பதை வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திட வலியுறுத்தியும் எழுச்சிப் பொதுக்கூட்டம் தாம்பரத்தில் மே பதினேழு இயக்கத்தினால் 07-04-2018 சனிக்கிழமை மாலை நடத்தப்ப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், தமிழ் உணர்வாளர்கள் பேரெழுச்சியுடன் கலந்து கொண்டு காவிரி உரிமைக்காக திரண்டு நின்றனர்.

புத்தர் கலைக்குழுவின் பறை இசை நிகழ்ச்சியுடனும், தோழர் மகிழினி மணிமாறன அவர்களின் “தடைகளை உடைத்துவிட்டு வா காவேரி” என்ற உணர்ச்சிப் பாடலுடனும் கூட்டம் துவங்கியது.

மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல் சாமி அவர்கள் துவக்க உரையாற்றினார். மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் பிரவீன் குமார், அருள்முருகன், லெனாகுமார், திருமுருகன் காந்தி ஆகியோர் காவிரியில் நமது உரிமை குறித்தும், நமது போராட்டங்கள் எத்தகையாதாய் இருக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கமான எழுச்சி உரையினை ஆற்றினர்.

IPL போட்டியினை தூக்கி எறிந்து காவிரிக்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு நின்றதை பொதுமக்கள் அனைவரும் வரவேற்றனர்.

மேலும் இக்கூட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பாக அதன் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை வழங்கினர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காஞ்சி மாவட்ட தலைவர் முருகன், மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் யாகூப், இந்திய தேசிய லீக் கட்சியின் தோழர் அக்பர் அலி, நெடுவாசல் போராட்டக் குழுவின் தோழர் வீரகுமார், தோழர் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை தெரிவித்தனர்.

காணொளி பதிவுகள்

   

Leave a Reply