காவிரி உரிமை மீட்கவும், தமிழ்நாட்டின் உரிமையான 370 டி.எ,.சியினை வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கண்டன ஒன்று கூடல் மதுரையில் நடைபெற்றது.
ஏராளமான பொதுமக்கள் தோழர்களை சூழ்ந்து நின்று தங்கள் ஆதரவினை தெரிவித்தனர். இளைஞர்களும், தமிழ் உணர்வாளர்களும், பொதுமக்களும் இந்த ஒன்று கூடலில் கலந்து கொண்டனர்.
அதில் மே பதினேழு இயக்க தோழர் மெய்யப்பன், தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர் பிரபாகரன், தமிழ் உணர்வாளர் அசோக், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் செந்தில், தமிழ் தமிழர் இயக்கத்தின் தோழர் பரிதி, வழக்கறிஞர் கதிர்வேல், வேங்கைமாறன், மே பதினேழு இயக்கத்தின் தோழர் மகாமணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.