மனிதநேய ஜனநாயக கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவினையொட்டி, அக்கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் தமிமுன் அன்சாரி தலைமையில், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் சென்னை தி.நகரில் 23-3-2018 அன்று நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு மத்திய அரசின் அயோக்கியத்தனங்களைக் கண்டித்து சிறப்புரையாற்றினார்.



