வெல்லும் தமிழீழம் மாநாட்டின் தீர்மானங்கள் சென்னைப் பிரகடனம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
தீர்மானங்கள்:
1. தனித் தமிழீழத்திற்கான சர்வதேச பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்
2. ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
3. தமிழீழ இனப்படுகொலையில் பங்கெடுத்த பிற சக்திகள் மீதும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
4. ஈழத்தமிழரின் வரலாற்று தாயகத்தில் இருந்து சிங்கள இராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும்.
5. இலங்கையில் மத வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்:
6. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இறையாண்மையுள்ள நிலப்பரப்பாக இருந்த தமிழீழப்பகுதிக்கான தன்னாட்சிப் பிரதேசத்திற்கு அங்கீகாரம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
7. தமிழர் பெருங்கடலில் நடக்கும் இராணுவ, விரிவாதிக்கப் போட்டிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
8. இந்தியா,அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் மீதான தடைகள் நீக்கப்பட வேண்டும்.
9. தமிழகத்தில் வாழும் தமிழீழ அகதிகளுக்கான உரிமை சர்வதேச சட்டத்தின்படி வழங்கப்பட வேண்டும்.
10. 2013ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ’தமிழினப்படுகொலை’ தீர்மானத்தின் அடிப்படையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தமிழர்களின் பண்பாட்டு உரிமையான நினைவேந்தலை சென்னை மெரினாவில் நடத்த உரிமை வேண்டும்.
11. தமிழினப்படுகொலைக்கான நினைவுச் சின்னத்தை சென்னை மெரினாவில் தமிழக அரசு அமைக்க வேண்டுமென்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
12. தமிழக சட்டமன்றத்தில் 2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களான தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு மற்றும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை போன்றவற்றை இந்திய ஒன்றியத்தில் இருக்கிற பிற மாநில சட்டமன்றங்களில் மற்றும் இந்திய பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் தீர்மானங்களாக நிறைவேற்றிட தமிழக கட்சிகள் மற்றும் இயக்கங்கள் முயற்சியை மேற்க்கொள்ள வேண்டுமென்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.
13. இந்திய ஒன்றியத்தில் இருக்கும் எல்லையோர மாநிலங்களுக்கு அதன் அயலுறவு கொள்கையை அந்த மாநிலத்தின் அரசியல், வாழ்வியல், வரலாற்றியலைக் கொண்டு தீர்மானிக்கும் உரிமையை வழங்கிட தமிழக கட்சிகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
வெல்லும் தமிழீழம் மாநாட்டில் வாசிக்கப்பட்ட தீர்மானங்கள் – காணொளி