பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், உடனடியாக அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் கரூரில் பேருந்து நிலையம் அருகில் 28-1-2018 ஞாயிறு அன்று காலை மே பதினேழு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேருந்து கழக நட்டத்திற்கு தமிழக அரசின் அமைச்சர்களின், அதிகாரிகளின் நிர்வாக ஊழலே காரணம். நீ செய்த ஊழலுக்கு மக்கள் தலையில் கை வைக்காதே!
போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தைக் காரணம் காட்டி விலையேற்றம் செய்யாதே போன்ற முழுக்கங்களை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் தனபால், தமிழ்நாடு ஓய்வுபெற்றோர் அரசு ஊழியர் சங்கத்தின் தோழர் சடையன், சமூக செயல்பாட்டாளர் தோழர் பழனிச்சாமி, பகுத்தறிவாளர் மன்றத்தின் தோழர் தென்னரசு, கல்வி மேம்பாட்டுக் குழு கூட்டமைப்பின் தோழர் ராமசாமி, ஆதித்தமிழர் பேரவையின் தோழர் முல்லையரசு, சாமானிய மக்கள் கட்சி தோழர் குணசேகரன், தமிழ் உணர்வாளர் கூட்டமைப்பின் வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் மே பதினேழு இயக்கத் தோழர்கள் கண்டன உரையாற்றினர்.