2017 ஆம் ஆண்டில் மே பதினேழு இயக்கம் முன்னெடுத்த நிகழ்வுகளின் தொகுப்பினை உங்களுக்கு அறியத் தருகிறோம். ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் நாங்கள் முன்னெடுத்த முக்கியமான நிகழ்வுகள் மற்றும் போராட்டங்களின் புகைப்படங்களை இங்கு வெளியிட்டிருக்கிறோம். நிகழ்வின் தேதி மற்றும் விவரங்கள் ஒவ்வொரு புகைப்படத்திலும் அளிக்கப்பட்டிருக்கிறது. தோழர்கள் ஒவ்வொரு படமாக பார்க்கவும். தொடர்ந்து தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராட இயக்கமாய் இணைந்திடுங்கள். (நிகழ்வுகளின் முக்கியத்துவம் கருதி மே 17 இயக்கம் பங்கு கொண்ட ஓரிரு நிகழ்வுகளையும் இந்த பட்டியலில் இணைத்துள்ளோம்.)
குமரி மீனவர்களுக்கு ஆதரவாக நெல்லையில் ஒன்றுகூடல்
தந்தை பெரியாரும் தமிழ்நாட்டு உரிமையும் – கருத்தரங்கம் (24-12-2017)
குமரி மீனவர்களுக்கு மே17 இயக்கத்தின் ஆர்ப்பாட்டம் – தஞ்சாவூர் (23-12-2017)
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மோடி படத்தைக் காரணம் காட்டி தோழர்களைக் கைது செய்தது காவல்துறை.
குமரி மீனவர்களுக்கு மே17 இயக்கத்தின் ஆர்ப்பாட்டம் – திருச்சி (23-12-2017)
வேலூரில் குமரி மீனவர்களுக்காக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் 22-12-2017
கூடுவாஞ்சேரியில் குமரி மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம் (16-12-2017)
மீனவர்களை காக்காத அரசுகளை கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு(12-12-2017)
தமிழர் உரிமையும் தற்சார்பு தமிழ்நாடும் – ஓசூர் கருத்தரங்கம் (10-12-2017)
தமிழர் உரிமையும், தற்சார்பு தமிழ்நாடும் – பெங்களூர் கருத்தரங்கம் (10-12-2017)
குமரி மீனவர்களுக்காக மதுரை ஆர்ப்பாட்டம் (09-12-2017)
குளச்சல் மற்றும் தேங்காப்பட்டினம் மீனவர் போராட்டத்தில் மே பதினேழுஇயக்கம்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் மே பதினேழு இயக்கத்தின் தோழர் திருமுருகன் காந்தி
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வில் (27-11-2017) மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு – மதுரை பொதுக்கூட்டம் (19-11-2017)
மூடப்படும் ரேசன் கடைகள் புத்தக அறிமுகம் மற்றும் கருத்தரங்கம் மே பதினேழு இயக்கத் தோழர்களால் நவம்பர் 12 அன்று வேலூரிலும், நவம்பர் 26 அன்று பெரம்பலூரிலும் நடத்தப்பட்டது.
சென்னையின் ஆற்றங்கரையோரத்தில் இருந்து 55,000 குடும்பங்கள் வெளியேற்றப்படுவதை உடனடியாக நிறுத்து – (31-10-2017)
தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் – புதுச்சேரி (07.10.2017)
தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் – தி.நகர் (23.09.2017)
திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 தோழர்கள் விடுதலை (20-9-2017)
17-9-2017 காலை, தந்தை பெரியாரின் 139 வது பிறந்தநாளையொட்டி சென்னை தி நகரில் உள்ள பெரியார் சிலைக்கு மே பதினேழு இயக்க தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வஞ்சிக்கப்படும் தமிழகம்-பெரியாரின் 139வதுபிறந்தநாள் பொதுக்கூட்டம்
16-09-2017 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தந்தை பெரியாரின் 139 வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தின் கல்வியுரிமை, பொருளாதார, இயற்கை வள சுரண்டலை மீட்கும் நோக்கில் வஞ்சிக்கப்படும் தமிழகம் என்ற தலைப்பில் சென்னை எம் ஜி ஆர் நகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய் – திருச்சியில் ஆர்ப்பாட்டம் (15-9-2017)
நீட் தேர்வினை நிரந்தரமாக இரத்து செய்யக் கோரி மே பதினேழு இயக்கம் சார்பாக 15 செப் 2017 மாலை 5 மணியளவில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவையில் மாணவி அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு (10-9-2017)
அனிதா மரணத்திற்கு காரணமான பாஜக அலுவலகம் சென்னையில் முற்றுகை(03-9-2017)
மாணவி அனிதா மரணம் – மதுரை பாஜக அலுவலகம் முற்றுகை (02-09-2017)
நீட் தேர்வால் வஞ்சிக்கப்பட்ட பெற்றோர்களுக்கான கலந்துரையாடல் (29-8-2017)
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி 9 பேர் மதுரையில் காலவரையறையற்ற பட்டினிப் போராட்டத்தினை ஜூலை மாதம் நடத்தினர். உயர்நீதிமன்றத்தில் தமிழ் போராட்டக் குழு சார்பில் இப்போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் மே பதினேழு இயக்கத் தோழர் மெய்யப்பன் அவர்களும் கலந்து கொண்டு உண்ணாவிரதம் மேற்கொண்டார்
மக்களுக்காக போராடினால் குண்டர் சட்டமா?-ஆர்ப்பாட்டம்(30-7-
மாணவி வளர்மதி, தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்ய வலியுறுத்தியும், கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 தோழர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்டது.
GST-ஐ எதிர்க்க வேண்டும் ஏன்? – மதுரை கருத்தரங்கம் (22-7-2017)
GST யை எதிர்க்க வேண்டும் ஏன்? – கருத்தரங்கம் – சென்னை (16-7-2017)
ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்(02-7-16)
மதுரையில் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல்(26-6-17)
நினைவேந்தல் அடக்குமுறைகளைக் கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்(27-5-2017)
நினைவேந்தல் அடக்குமுறைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- சென்னை (25-5-17)
நினைவேந்தல் அடக்குமுறைகள் மற்றும் கைதுகளைக் கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு (23-5-2017)
தமிழர் கடலில் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல்: பாஜக-அதிமுக அரசின் தமிழர் விரோத வெறியாட்டம் (21-5-2017)
ரேசன் கடைகளை மூடும் WTO ஒப்பந்த எதிர்ப்புக் கூட்டம்-திண்டுக்கல் (14-5-2017)
ரேசன் கடைகளை மூடும் WTO ஒப்பந்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம் (01-05-2017)
கீழடிக்கு வருகை தரும் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவிற்கு எதிராக கருப்பு கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் (28-3-2017)
தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத இந்திய மோடி அரசின் வருமான வரி அலுவலகம் முற்றுகை. (21-3-2017)
மூடப்படும் ரேசன் கடைகள் – புத்தக வெளியீடு & கருத்தரங்கம் 9-4-17
ஐ.நா மனித உரிமை அவையில் தமிழருக்கு மறுக்கப்பட்ட நீதியும், பின்னணியும் குறித்தும், தமிழக பிரச்சினைகள் குறித்து ஐ.நாவில் மே பதினேழு பதிவு செய்ததை விளக்கியும் பத்திரிக்கையாளர் சந்திப்பு (25-3-2017)
மாணவர் முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு மதுரையில் கண்டன கூட்டம் (23-7-2017)
ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் மே பதினேழு இயக்கம் – மார்ச் 2017
அமெரிக்கா-இங்கிலாந்து-இந்த
தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து மதுரையில் மத்திய அரசு அலுவலகம் முற்றுகை (7-3-2017)
தமிழீழ விடுதலையை வெல்வோம் பொதுக்கூட்டம் – (4-3-2017)
நெடுவாசல் நோக்கிய வாகனப் பேரணி தடுத்து நிறுத்தம்(05-03-2017)
நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து கிராம மக்களும், விவசாயிகளும் நடத்திய போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்று அவர்களுக்கு ஆதரவினை வழங்கியது.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்(25-2-17)
ஜல்லிக்கட்டு-காவல்துறையின்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசின் வன்முறைக்கு எதிராக வழக்கு பதிவு
ஜல்லிக்கட்டு போராட்டம்-வன்முறையை செலுத்தியது அரசும் காவல்துறையுமே – பத்திரிக்கையாளர் சந்திப்பு
தடையை மீறி அலங்காநல்லூர் நோக்கி பேரணி (16-1-2017)
விவசாயிகளின் மரணத்தை தடுக்காத சாஸ்திரி பவன் முற்றுகை (10-1-2017) – தந்தை பெரியார் திராவிடர் கழகம் | தமிழர் விடியல் கட்சி | மே பதினேழு இயக்கம்
ஜல்லிகட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி ஜனவரி 8ம் தேதி அன்று மதுரை காளவாசலில் மே பதினேழு இயக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தியது.
– மே பதினேழு இயக்கம்
9884072010