இந்துத்துவத்தின் மற்றுமொரு பெருமுதலாளிகளுக்கான சட்டம் :

“நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்புரிமை மசோதா 2017” (FRDI Bill 2017) என்ற சட்ட மசோதா 2017 ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்பட்டுள்ளது.

இந்த மசோதா படி இனி “வாரா கடன்கள்” மூலம் திவாலாகும் வங்கிகளின் கடனை அந்த வங்கியின் வாடியாளர்களின் “சேமிப்பு மற்றும் வைப்பு நிதி” தொகையில் இருந்து எடுத்து ஈடுகட்டிக்கொள்ளலாம். அதாவது, வங்கியின் “வாரா கடனை” அதன் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை கொடுத்து வங்கியை காப்பாற்ற வேண்டும் என்பதே.

தற்போது, வங்கிகள் 11 லட்சம் கோடி “வாரா கடனில்” தத்தளிக்கின்றன. ஆக்டொபர் மாதம், ஒன்றிய நிதி அமைச்சர் ஜெயிட்லி திவாலாகும் வங்கிகளுக்கு 2.11 லட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தை (bail out) எப்பவும் போல தாரைவார்த்தார். மீதி பணத்தை, வங்கி வாடிக்கையாளர்களின் “சேமிப்பு, வைப்பு” கணக்கில் இருந்து “திருடுவதை” (bail in) சட்டமுறையாக்குவது தான் இந்த புதிய மசோதா.

அதுசரி, அந்த 11 லட்சம் கோடிகளை வங்கிகள் கடனாக கொடுத்த தொழில் என்னவாயிற்று?
அதை, இந்திய ஒன்றியத்தின் பணக்கார, ஆசியாவின் பணக்கார, உலகின் பணக்கார தொழிலதிபர்கள் தான் சொல்ல வேண்டும்.

இந்த புதிய மசோதாவில் மேலும் ஒரு முக்கிய சரத்து உள்ளது. 1960களில் வங்கிகள் திவாலான காலத்தில், மக்கள் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்திற்கு உத்திரவாதம் அளிப்பதற்காக “வைப்புத்தொகை காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாதக் கூட்டுத்தாபனம்” (Deposit Insurance and Credit Guarantee Corporation) உருவாக்கப்பட்டது. இதன்படி, ஒரு வங்கி திவாலானாள் அதன் வாடிக்கையாளர்களின் பணம் அதிக பட்சமாக 1 லட்சம் (1993ல் நிர்ணயித்தது) வரை திரும்பி அளிக்கப்படும். தற்போதைய, 2017 புதிய சட்ட மசோதாவின் படி இந்த அமைப்பு களையப்படும்.

ஆக, மக்கள் பணத்தை அவர்களின் அனுமதி இன்றி வங்கிகள் தங்கள் நட்டத்தை ஈடு செய்ய எடுத்துக்கொள்ளலாம். அப்படியே, வங்கி திவாலானாள் மக்கள் பணத்தை திரும்பி தர வேண்டியதில்லை. என்ன ஒரு அற்புதமான பாட்டாளி மக்கள் நல மசோதா.

” “ஜன் தன் யோஜனா” மற்றும் “பண மதிப்பிழப்பு” மூலம் ஒன்றியத்தின் அனைத்து ஏழை, எளிய மக்களின் பணமும் கட்டாய வங்கி பரிவர்த்தனை வளையத்திற்குள் வந்துள்ளவர்களை பயமுறுத்தாமல், ஒன்றிய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றவேண்டும்” என்கிறது ஆங்கில “தி இந்து” பத்திரிகையின் தலையங்கம்.

ஆமாம். இடது சாரி கொள்கையாளராக நிறம் மாறும் “முதலாளித்துவ ஏகாதிபத்தியதின் அடிவருடி” பத்திரிகையின் தலையங்கம் தான் அது.

http://www.thehindu.com/opinion/editorial/bail-in-doubts/article21261606.ece

Leave a Reply