கன்னியாகுமரி மாவட்டம் இராமன் துறையை சேர்ந்த மீனவர் ஜெர்மீஸ் புயலில் மாட்டி இறந்துள்ளார். அவரின் உடல் சற்றுமுன் தேங்காய் பட்டினம் துறைமுகத்திற்கு சக மீனவர்களால் மீடக்ப்பட்டு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
மீண்டுவந்த மீனவர்கள் இன்னும் ஏராளமான மீனவர்கள் கடலுக்குள் தத்தளித்துக்கொண்டிருப்பதாகவும் அவர்களின் படகுகள் சேதமடைந்து எங்கும் போகமுடியாமல் தவிக்கிறார்களென்றும் சொல்கிறார்கள்.
புயலால் இவர்கள் பாதிக்கப்பட்ட போது இந்திய கப்பல்படையை சேர்ந்த கப்பல் ஒன்று போயிருக்கிறது. இவர்கள் போட்டுக்கு கொடுக்கப்பட்ட எண் அடிப்ப்டையில் கப்பல் படைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் கப்பல் படை இவர்களை கண்டுகொள்ளாமல் வேகமாக சென்றதாகவும் தெரிவிக்கின்றனர்.
புயல் வருவதற்கு முன்னமே கடலுக்கு சென்றவர்களுக்கு புயல் வருகிறது என்று சொல்லாததே இத்தனை உயிர்கள் பலியானதற்கு காரணமென்றும், கடலுக்கு சென்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான கருவி இலங்கையில் இருக்கிறதென்றும் இந்தியாவில் இதுகுறித்து அரசுகள் எந்த அக்கறையும் காட்டவில்லையென்றும் அந்த கருவியை உங்களுக்கு மானிய விலையில் தருகிறொமென்று சொல்லி இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரூபாய் 400 வாங்கியிருக்கார்களென்றும், அந்த கருவி இன்னும் கொடுக்கப்படவில்லையென்றும் சொல்கிறார்கள்.
குறைந்தபட்சம் புயல் கடந்து போன பின்பாவது உடனே கடலோர கப்பல் படை வந்திருந்தால் கூட நிறைய மீனவர்களை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அதுவும் செய்யவில்லை. இன்றுவரை மீனவர்களை மீனவர்கள் தான் முடிந்தளவு காப்பாற்றிக் கொண்டிருக்கின்றோமென்று வேதனையுடன் சொல்கிறார்கள்.
மத்திய அரசுதான் இப்படி ஓரவஞ்சைனையுடன் செய்கிறதென்றால் மாநில அரசின் கடலோர படை என்ன செய்கின்றதென்றே தெரியவில்லை என்றும். ஆனால் கேரளாவில் அந்த மாநில அமைச்சர்கள் கேரளாவிலுள்ள சின்ன சின்ன தீவுகளில் சின்ன குடில் அமைச்சி உட்கார்ந்துகொண்டு ஹலிகாப்டர்களில் அந்த மக்களை மீட்கும் வேலையை செய்கிறார்கள். அவர்கள் தான் எங்களில் சிலரை காப்பாற்றி ஏதேனும் ஒரு பாதுகாப்பான இடத்தில் சேர்த்தார்களென்று கோபத்துடன் பதிவு செய்கிறார்கள்.
மத்திய மாநில அரசுகளின் துரோகத்தால் மிகப்பெரிய உயிர்தேசம் கன்னியாகுமரி மாவட்டத்தை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் ஏற்பட்டிருக்கிற வாய்ப்புகள் இருப்பதாகவே மீனவ கிராமங்கள் எங்கு போனாலும் தெரிகிறது. எனவே மத்திய மாநில அரசுகளின் இந்த துரோகத்தை கேள்விக்குள்ளாக்குவோம். பாதிக்கப்பட்டிருக்கிற மீனவ குடும்பங்களுக்கு நிவாரணமும் இன்னும் கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கிற மீனவர்களை உடனடியாக மீட்கவும் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுப்போம்.