பாளையங்கோட்டை சிறையில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தினை துவக்கி இருக்கும் தோழர்.முகிலன் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள். அனைவரும் வாசித்து பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். போராடும் தோழருக்கு துணை நிற்பது நம் கடமை.
– மே பதினேழு இயக்கம்.
1. கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடிய சுமார் 1 லட்சம் பேர் மீது 132 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவற்றை ரத்து செய்ய வேண்டும்.
2. தாமிரபரணியிலிருந்து நீர் எடுத்து நெல்லையில் தயாரிக்கப்படும் கோக், பெப்சி குளிர்பான ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.
3. மணல் எடுப்பதற்கு 10 ஆண்டு காலம் தடை விதித்திருந்த கொங்கராயன்குறிச்சி(திருவைகுண்டம்) பகுதியில், தனியாருக்கு மணல் அள்ளும் உரிமையை கொடுப்பதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
4. வழக்கறிஞர் செம்மணியை தாக்கிய போலிசார் மற்றும் உயர் அதிகாரிகளை வேலை நீக்கம் செய்ய வேண்டும்.
5. ISRO இருக்கும் மகேந்திரகிரி மலையில் விரிசல் விழுந்ததை செய்தியாக்கிய தினகரன் செய்தியாளர் அந்தோணி ஜெகன், புதிய தலைமுறை செய்தியாளர் ரஜி கிருஷ்ணா மற்றும் நாகராஜன் மீது போடப்பட்ட பொய் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
6. பேராசிரியர் ஜெயராமன் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
7. கார்ட்டூனிஸ்ட் பாலா வீட்டிற்குள் புகுந்து அவரை கைது செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
8. தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு, கெயில் திட்ட எதிர்ப்பு, காவேரி ஆறு பாதுகாப்பு,நிலத்தடி நீர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
9. நெல்லை மாவட்டம் உடன்குடி, சாத்தான்குளம் போன்ற பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு நிலத்தேர்வு ஆய்வினை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இந்த 9 கோரிக்கைகளை முன்னிறுத்தி பாளையங்கோட்டை சிறையிலுள்ள காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் முகிலன் அவர்கள் இன்று முதல் காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளார். இதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும், கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தர வேண்டும்.