மோடி ஏவிய ’பணமதிப்பிழப்பு’ எனும் பேய் இந்தியாவிலுள்ள ஜவுளி துறையின் பொருளாதாரத்தை சிதைத்த கொடூரம்.

- in பரப்புரை

ஜவுளித்துறையை (TEXTILE) பொறுத்தவரையில் இந்தியாவில் 10.5கோடி மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்கிக்கொண்டிருந்த ஒரு துறை. 2025இல் இது மேலும் 5கோடி பேருக்கு கூடுதலாக வேலையை வழங்குமென்று கணகிடப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு துறையை நவம்பர் 08,2016 ஒரே நாளில் தலைகீழாக மாற்றிவிட்டார் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடி. அவர் அறிவித்த 500 மற்றும் 1000ரூபாய் நோட்டு செல்லாது என்ற ஒன்றை அறிவிப்பு இந்த துறையின் வர்த்தகம் சுமார் 70% இழந்து அது மேலும் அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

உதாரணமாக இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள திருப்பூர், குஜராத்திலுள்ள சூரத், மகாராஷ்டிராவிலுள்ள பேவண்டி ஆகியவை ஜவுளி உற்பத்தியில் முன்னனியிலுள்ள இடங்கள். இந்த இடங்களில் மட்டும் முறையே 6லட்சம், 3.5லட்சம், 2.5கோடி பேர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இவர்களில் 90% வார மற்றும் நாள் சம்பளம் அடிப்படையில் வேலை பார்த்தவர்கள். இவர்களுக்கு வேலை முடிந்தவுடன் சம்பளம் கிடைத்தக்கொண்டிருந்த நிலையில் தான் மோடி இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.

அதன்மூலம் பணம் எடுப்பதில் நிறைய கட்டுபாடுகளை அதாவது ஒருநாளைக்கு இவ்வளவு தான் எடுக்கமுடியும். வாரத்திற்கு இவ்வளவு தான் எடுக்கமுடியும் வங்கியில் குறிப்பிட்ட பணத்திற்கு மேல் பணபரிமாற்றம் நடக்ககூடாதென்று ஏனோ தானோவென்று ஏகப்பட்ட கெடுபிடிகளை அறிவித்ததால் கம்பெனிகளால் பணத்தை எடுக்க முடியவில்லை. அதனால் தொழிலாளிகளுக்கு சம்பளம் முறையாக வழங்கமுடியாமல் போனது. சம்பளம் வழங்கததால் தொழிலாளிகள் வேலைக்கு சரியாக வராமல் போனார்கள் மேலும் கிடைக்கும் பணத்தை மாற்ற வங்கிக்கு அலைந்து கொண்டிருந்தனர். வேலைக்கு தொழிலாளர்கள் சரியாக வராததனால் முடிக்கவேண்டிய பணிகள் தேங்கி நேரத்திற்குள் முடிக்க முடியாமல் போனது, வேலையை நேரத்திகுள் முடிக்க முடியாததனால் மீண்டும் ஆர்டர் தருவதை நிறுவனங்கள் வேறு நாடுகளுக்கு கொடுத்து விட்டது. ஆர்டர் இல்லாமல் வெறுமன கம்பெனிகளை ஓட்டமுடியாத சூழல் ஏற்பட்டு இறுதியில் கம்பெனிகள் மூடவேண்டிய கட்டாயத்திற்கு சென்று விட்டது.

திருப்பூரில் மட்டும் வருடத்திற்கு 40,000கோடிக்கு மேல் ஏற்றுமதி செய்து கொண்டிருந்த துறை. கடந்த மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த 2016-2017 ஆண்டில் 30,000 கோடியாக குறைந்திருக்கிறது.இது இந்த ஆண்டில் 2017-18இல் 21ஆயிரம் கோடியாக
மேலும் குறையுமென்று திருப்பூர்  ஏற்றுமதியாளர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது. இதுவரை 50-60% கடைகள் மூடப்பட்டுவிட்டன என்றும் இப்போது ஜிஸ்டி வேறு வந்துவிட்டதால் இது இன்னும் அதிகரிக்குமென்றும் கே.எஸ் பாபுஜி தென்னிந்திய உள்ளாடை தயாரிப்பு நிறுவன குழுவின் தலைவர் அறிவித்திருக்கிறார்.

சூரத்தில் நிலைமை இன்னும் மோசம் சூரத்தில் மட்டும் 2250தொழிற்கூடங்கள் உள்ளன, இதில் 1750ஜவுளிகூடங்கள் 70சாயமிடுதல் கூடங்கள் மற்றும் 40சாயம் மற்றும் இராசயண உரமேற்றும் கூடங்கள் உள்ளது. இவ்வளவு பெரிய தொழிற்கூடத்தில் தற்போது 40% மட்டுமே இயங்கும் அவலம் நடக்கிறது. ஒருநாளைக்கு 40மில்லியன் மீட்டர் துணி தயாராகிகொண்டிருந்த சூரத்தில் கடந்த ஆறுமாதமாக சராசரியாக 10-15மில்லியன் மீட்டர் துணிகள் தான் தயாராகிக்கொண்டிருக்கிறது.

மேலும் ஏற்கனவே ஜவுளி துறையில் ஏற்றுமதி செய்வதில் பல நாடுகளுக்குள் பலமான போட்டி இருந்து வருகிறது. இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. உதாரணமாக
2013-14 = 40.19 பில்லியன்
2014-15 = 38.60 பில்லியன்
2015-16 = 37.16 பில்லியன் என குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் மேலும் மேலும் இதை மோசமடைய செய்யும் விதமாகவே அரசின் கொள்கைகள் இருக்கீறது என்பதற்கு இந்த பணம்திப்பிழப்பு நடவடிக்கையும் ஜிஸ்டியும் சிறந்த உதாரணம்.

ஈரோட்டில் கடந்த மாதம் 24ஆம் தேதி கடனை திரும்ப செலுத்த முடியாத நெசவு தொழிலாளி தனது சிறுநீரகத்தை விற்க முனையும்போது கைது செய்யப்பட்டாரென்று ஒரு செய்தியை படித்திருப்பீர்கள். அவரை இந்த நிலைக்கு எது கொண்டு வந்தது. இந்த தவறான பொருளாதார நடவடிக்கை தானே.

சிறுநீரகம் விற்க போன ஒருவரை கைது செய்து அதை தடுத்துவிட்டோம். ஆனால் இதுபோல இந்தியாவெங்கும் மோடி கும்பலின் சதியால் இறந்துகொண்டிருக்கிறவர்களை எப்படி காக்க போகிறோம். ஒரு துறையில் மட்டும் இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தி இந்த கும்பலுக்கு என்ன தண்டனையை யார் கொடுப்பது?

Leave a Reply