சாதியொழிந்த மதம் கடந்த ஒரு முற்போக்கான தேசத்தை தமிழருகென்று கட்டியெழுப்பவே தமிழீழ தேசியத்தலைவர் தோழர் பிரபாகரன் ஈழமண்ணில் போராடினார். அதற்காகவே அந்த மக்களை இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் சிங்களத்துடன் சேர்ந்து இனப்படுகொலை செய்தது. தற்போது உலக அரங்கில் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நீதிகேட்டு ஈழத்தமிழர்கள் போராடிகொண்டிருக்கும் போது அதனை தடுக்க பல்வேறு சூழ்ச்சிகள் அந்த மண்ணில் இந்தியா அமெரிக்கா மற்றும் சிங்களத்தால் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
அதன்படி தான் இலங்கையில் நடந்தது ஒரு தேசிய இனப்போராடமில்லை அது மதங்களுக்கு இடையே நடந்த ஒரு மோதல் என்று இந்தியா மற்றும் சிங்களத்தின் ஆதரவுடன் அமெரிக்க ஐநா அவையில் ஒரு தீர்மானத்தை முன்வைத்தது. அதன்படி ஈழத்தில் மதமோதல்களை உருவாக்க தமிழீழத்தில் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லீம்கள் மற்றும் கிருத்துவர்களை இந்த போராட்டத்திலிருந்து அந்நியபடுத்துவதற்காகவும் அதே நேரத்தில் மத மோதல்களை உருவாக்கவும் இந்தியாவின் ஏற்பாட்டில் இந்துத்துவா கொள்கைகளை உள்வாங்கிக்கொண்ட சிவசேனா என்ற அமைப்பு கடந்த வருடம் அங்கு உருவாக்கப்பட்டது.
அது தற்போது திவிரமான சிறுபாண்மையின வெறுப்பை ஈழத்தமிழர்கள் மத்தியில் பரப்பிவருகிறது. அதன்படி இதுவரை பொங்கல் பண்டிகையை மட்டுமே சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருந்த ஈழத்தமிழர்கள் மத்தியில் ஆரிய பண்டிகையான தீபாவளியை தமிழர்கள் கொண்டாடவேண்டுமென்றும், அதிலும் இந்து வணிகர்களிடம் மட்டுமே பொருடகள் வாங்க வேண்டுமென்றும் ஒரு பிரச்சாரத்தை அது முன்னெடுத்திருக்கிறது. இது இந்தியாவில் இந்துத்துவாதிகள் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் வெறுப்பு பிரச்சாரம் தான் இதை இப்போது ஈழத்தில் பரப்ப நினைக்கிறார்கள்.
இதற்கு ஈழத்தமிழர்கள் கடுமையான எதிர்வினை ஆற்ற வேண்டும் இல்லையென்றால் நாம் போராடி அடைகாத்துக்கொண்டிருக்கும் ஈழ விடுதலை என்ற நெருப்பை இந்த இந்துத்துவ கும்பல்கள் அழித்துவிடும். எச்சரிக்கையுடன் இருப்போம். தமிழீழம் வெல்வோம்.