பாஜக-இந்துத்துவ பாசிசத்தினை இந்திய அளவில் வீழ்த்துவதை குறிக்கோளாக பிரகடப்படுத்தியிருக்கிறது இக்கூட்டமைப்பு.
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த் அவர்கள் தலைமையிலும், சமூகநீதி போராட்டகளத்தில் நிற்கும் தோழர்களாலும் ’நீதி மற்றும் அமைதிக்கான கூட்டமைப்பு’ இன்று உருவாக்கப்பட்டது.
ஆரிய-பார்ப்பனிய அரசாக விளங்குகின்ற இந்துத்துவ பாசிசத்தினை வீழ்த்தவேண்டுமென்று அனைத்து தோழர்களும் ஒரே குரலில் பதிவு செய்தார்கள். பார்ப்பனியம் என்கிற பாசிச கருத்தியலே சனநாயகத்திற்கு எதிராக இருக்கிறது என்பதை பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் முதல் கர்நாடகம், மராத்தியம், ஆந்திரா என பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த செயல்பாட்டாளர்கள் வெளிப்படையாக பதிவு செய்தார்கள். அனைத்து சமூக மக்களுக்கும் எதிரானதாக இப்பாசிச கருத்தியல் செயல்படுகிறது என்பதை ஆதாரப்பூர்வமான முறையில் பதிவு செய்தார்கள். பார்ப்பனியம் என்பதை ஆதிக்க கருத்தியலாக கிட்டதட்ட அனைத்து தரப்பினரும் முன்வைத்து விவாதித்தார்கள்.
கடந்த இரண்டு நாட்களாக (15,16/10/2017) மும்பை நகரில் ஒருங்கிணைக்கப்பட்ட இம்மாநாட்டு அரங்கம் பல்வேறு செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைத்திருக்கிறது. மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு. கோல்சா பாட்டேல், அல்ஃபர்க்கான் இதழின் ஆசிரியர் திரு. கலீலுர் ரஹ்மான், BAMCEF- அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், பழங்குடி பணியாளர் அமைப்பின் தலைவர் திரு. வமன் மேஷ்ராம், குஜராத் படுகொலைக்கான சட்டப்போராட்டத்தினை நடத்தும் தோழர். தீஸ்டா சட்டல்வட், புரட்சிகர கவிஞர் தோழர்.வரவரராவ் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற நிகழ்வில் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குழுவும் பங்கெடுத்தது.
தலித்திய செயல்பாட்டாளர்கள், பெண் உரிமைச்செயல்பாட்டாளர்கள், இசுலாமிய தோழமை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் என ராஜஸ்தான், மராத்தியம், கர்நாடகம், தமிழ்நாடு, டில்லி, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என பல மாநிலப்பிரதிநிதிகளும் பங்கெடுத்து இக்கூட்டமைப்பினை உருவாக்கி இன்று -16/10/2017 ‘மும்பை பிரகடனத்தினை’ வெளியிட்டார்கள். கிட்டதட்ட 150 பிரதிநிதிகள் பங்கெடுத்த இந்நிகழ்வில் SDPI கட்சியின் தமிழக தலைவர் தோழர்.தெகலான் பாகவி, தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் தோழர்.நாகை திருவள்ளுவன், பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தோழர் அன்சாரி, உள்ளிட்டோருடன் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் குழுவும் பங்கெடுத்தது.
ஆரிய பாசிசத்தினை வீழ்த்தும் வரை மே17 இயக்கத் தோழமைகளுக்கு ஓய்வில்லை.